ஒவ்வொரு மாதத்திலும் வரும் வளர்பிறை, கிருத்திகை மிகவும் பலன்கள் உகந்த நாளாகும். அந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடையின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். ஒவ்வொரு காரியத்தையும் தொடங்கும் முன்பு விநாயகப் பெருமானை நினைத்து தொடங்கினால் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும்.
வாழ்வில் நமக்கு விதிக்கப்பட்ட வினையெல்லாம் தீர வேண்டுமென்றால் விநாயகனின் தம்பி அறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானின் கிருத்திகை நட்சத்திர விரதத்தை மேற்கொள்ள வேண்டும். இப்படி தனித்தனி நாளில் வழிப்பட்டாலே சிறப்பு என்றால், இரண்டும் சேர்ந்து வந்தால் இன்னும் சிறப்புதான்.
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஏனென்றால் சங்கடஹர சதுர்த்தியில் அவரை வணங்குவது பேரின்பத்தை தரும்.
இன்னல்கள் இல்லாத இனிமையான வாழ்க்கை அமைய முருகப்பெருமானின் கிருத்திகை விரதம் நமக்கு கைகொடுக்கும். பங்குனி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியிலும், கிருத்திகை நட்சத்திரத்திலும் விநாயகப் பெருமான் மற்றும் முருகரை வழிபடுவதால் நன்மைகள் பல உண்டாகிறது.
அந்தவகையில் பங்குனி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில், கிருத்திகை நட்சத்திரத்தில் விநாயகரையும், முருகரையும் வழிபட்டால் ஏராளமான நன்மைகளை அடையலாம். திருமணத் தடை, வீடுகளில் நிலவி வரும் பிரச்சினைகள், குடும்ப பிரச்சினைகள்,சொத்து தகராறு, தொழிலில் இருந்து வரும் சிரமங்கள் என்று நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் சதுர்த்தியில் விநாயகப்பெருமானையும், கிருத்திகையில் முருகனையும் வணங்குவதால் நீங்கும்.
ALSO READ | கோச்சார அமைப்பு சரியா இருந்தாலே கல்யாணம் நடக்கும்..!