ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
சந்திர தரிசனம்
மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும். இதையே சந்திர பிறை என்கிறார்கள். மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி “சந்திர மௌலீஸ்வரராக” காட்சி தருகின்றார்.
எனவே மூன்றாம் பிறை தரிசனம் என்பது சந்திர மௌலீஸ்வரராக காட்சி தரும் சிவபெருமானை தரிசிக்கும் பாக்கியத்தை பெறுவது ஆகும். இந்த சந்திர தரிசனம் கிடைக்கும் போதெல்லாம் சிவன் நாமத்தை கூறினால் நிம்மதி அடையலாம். தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எந்த நிலையிலும் மன வியாதிகளே வராது. செல்வ வளம் பெருகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
நன்மைகள் :
- சந்திர தரிசனத்தின்போது சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலது புறமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்கினால், பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.
- மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.
- மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.
- சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.
- திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராக சந்திர தரிசனம் செய்யலாம்.
- திருமணம் ஆகாதவர்கள் பெற்றோருடன் சேர்ந்து மூன்றாம் பிறையை தரிசிக்கலாம். இதனால் குடும்ப ஒற்றுமை பெருகும்.
மேலே கூறியவற்றை கடைபிடித்து சந்திர தரிசனம் செய்து இறைவன் அருள் பெறுக.
ALSO READ | எந்த ஓரையில் எதை செய்தால் என்ன பலன்..? இனிமே இப்படி பண்ணுங்க..!