இந்து சாஸ்திரத்தில் பல்வேறு சம்பிரதாயங்கள் அடங்கியுள்ளது. ஏராளமான வழிபாடுகளும், பரிகாரங்களும் இதில் அடக்கும். அதில் நமது குறைகள் தீர நாம் செய்ய வேண்டியது இந்த சந்திர தரிசனம் செய்வது ஆகும்.
சந்திர தரிசனம்:
ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். வளர்பிறை சந்திரனை தரிசித்தால் செல்வ வளம் பெருகும். பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும்.
மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும். வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் மூன்றாம் பிறை சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும்.
என்ன நன்மைகள்?
- இந்த பிறை நாள் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு.
- அதே போல் சித்திரை, வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும்.
- அதே போல் கார்த்திகை, மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும்.
- மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும், மனக்குழப்பம் நீங்கும், கண் பார்வை தெளிவாகும், கேட்ட வரம் கிடைக்கும் மற்றும் செல்வமும், சந்தோஷமும் தேடிவந்து அமையும்.
- சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.
- மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும்.
சிவபெருமான் தரிசனம்:
- மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரிசித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர்.
- மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான் என்று பழமொழியே உண்டு.
- ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.
- ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.
- ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.
- பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்.
- வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்சம் விருத்தியாகும்.
போன்ற பொன்மொழிகள் சந்திர தரிசனத்தின் நன்மைகளை எடுத்துரைக்கிறது.