Friday, May 26, 2023
HomeSpiritualசிவராத்திரி எத்தனை வகைப்படும்? ஒவ்வொரு சிவராத்திரிக்கும் இவ்வளவு சிறப்பா?

சிவராத்திரி எத்தனை வகைப்படும்? ஒவ்வொரு சிவராத்திரிக்கும் இவ்வளவு சிறப்பா?

சிவபெருமானுக்கு உகந்த நாளாக சிவராத்திரி கருதப்படுகிறது. அதுவும் மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரியும், அதனுடன் சேர்ந்து சனிப்பிரதோஷமும் வருகிறது. இதனால், சிவ பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
சிவராத்திரி 5 வகைப்படும். அந்த 5 வகை சிவராத்திரி பற்றி கீழே விரிவாக காணலாம்.

மகா சிவராத்திரி :

மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு வருஷ சிவராத்திரி என்ற பெயரும் உண்டு. இன்றைய நாளில் சிவபெருமானை வணங்குவது மிகவும் புண்ணியம் ஆகும்.

யோக சிவராத்திரி :

திங்கட்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும், அதாவது பகல், இரவு சேர்ந்த அறுபது நாழிகை (இருபத்தி நான்கு மணி)யும் அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி ஆகும்.

நித்திய சிவராத்திரி :

வருடத்தின் பன்னிரெண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தசி திதி இடம் பெறும் இருபத்தி நான்கு நாட்களும் நித்திய சிவராத்திரி ஆகும்.

பட்ச சிவராத்திரி :

தை மாத தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, பதின்மூன்று நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, பதினான்காம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.

மாத சிவராத்திரி :

மாதந்தோறும் அமாவாசைக்கு முன்தினம் வரும் சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி ஆகும்.

வரும் சிவராத்திரியன்று சிவாலயங்களுக்கு சென்று சிறப்பு பூஜையில் பங்கேற்று சிவபெருமான் அருள் பெற்று ஆனந்தம் அடையுங்கள். ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலாவது சிவபெருமானை வணங்கி கவலைகளை தீர்த்து கொள்ளுங்கள்.

ALSO READ | சிவராத்திரி மட்டும் ஏன் அவ்வளவு சிறப்பு..? விரதம் இருப்பது எப்படி?