Wednesday, May 31, 2023
Homeசெய்திகள்உலகம்யூரின் போனது ஒரு குத்தமா? காதலனை கத்தியால் குத்தி கொல்ல முயற்சித்த காதலி – நடந்தது...

யூரின் போனது ஒரு குத்தமா? காதலனை கத்தியால் குத்தி கொல்ல முயற்சித்த காதலி – நடந்தது என்ன?

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் அமைந்துள்ளது ஈஸ்ட் படேன் ரோக் பகுதி. இந்த பகுதியில் வசித்து வந்த 25 வயதான இளம்பெண் பிரியானா லாகோஸ்ட். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தாலும், அடிக்கடி இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பிரிந்துவிடலாம் என்று முடிவு எடுத்துள்ளனர்.

சிறுநீர் கழித்த காதலன்

பிரிந்து செல்வதற்கு முன்பாக இருவரும் ஒன்றாக பார்ட்டிக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியே சென்று ஒன்றாக மது அருந்தி விட்டு வீடு திரும்பியுள்ளனர். பின்னர், மதுபோதையில் இருவரும் ஒரே படுக்கையில் ஒன்றாக படுத்து தூங்கியுள்ளனர். காலையில் தனது காதலனுக்கு முன்பே எழுந்துவிட்டார் பிரியானா. அப்போது, மது போதையில் தூங்கிக்கொண்டிருந்த அவரது காதலன், மதுபோதையிலே படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார்.

காலையில் கண்விழித்ததும் இதை பார்த்த பிரியானாவுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த தனது காதலனை அடிக்கத் தொடங்கியுள்ளார். திடீரென தன்னை தாக்குவதால் திடுக்கிட்டு எழுந்த காதலன், என்ன காரணம் என்றே தெரியாமல் அடிவாங்கியுள்ளார். அவரது காதலி அவரிடம் சண்டையிட்டுக் கொண்டே அவரை அடித்துள்ளார். இதனால், அவரிடம் இருந்து தப்பிக்க அவரது காதலன் படுக்கையில் இருந்து எழுந்து ஓடியுள்ளார். ஆனால், கடுமையான கோபத்தில் இருந்த பியானா சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து தனது காதலனை சரமாரியாக குத்தினார்.

காதலி கைது

இதில் படுகாயமடைந்த அவரது காதலர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னரே, நிலைமையை உணர்ந்த பிரியானா தான் செய்த தவறை உணர்ந்து பதறியுள்ளார். உடனடியாக, தனது காதலனை மருத்துவமனையில் அனுமதித்தார். இந்நிலையில், இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த முயற்சிக்காக காவல்துறை பிரியானாவை கைது செய்துள்ளது. அவர் மீது கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளது.

பிரியானா அளித்த வாக்குமூலத்தில் சண்டையின் போது தனது காதலனும் ம் தன்னை தாக்கியதாகவும், சுய பாதுகாப்பு முயற்சிக்காகவே தான் கத்தியால் குத்தியதாகவும் கூறியுள்ளார். படுக்கையில் சிறுநீர் கழித்த காரணத்திற்காக காதலனை கத்தியால் குத்தி காதலி கொலை செய்ய முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.