Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்உலகம்2020ஆம் ஆண்டுக்கான வார்த்தை இதுதான்.. எல்லாத்துக்கும் இந்த கொரோனா தான் காரணம்

2020ஆம் ஆண்டுக்கான வார்த்தை இதுதான்.. எல்லாத்துக்கும் இந்த கொரோனா தான் காரணம்

2020 ஆம் ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாக லாக்டவுன் உள்ளது என்று காலின்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் எது என்பது ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் எது என்று வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவாக ஏதாவது முக்கிய நிகழ்வு நடைபெறும் போது தான் புது புது வார்த்தைகளையும் அதற்கான அர்த்தங்களையும் நாம் தெரிந்துகொள்வோம். உதாரணமாக சுனாமி தமிழகத்தை தாக்கிய பிறகு தான் சுனாமி என்கிற வார்த்தையே பெரும்பாலானோருக்கு முதலில் பரிட்சயமாகியிருக்கும். டிமானிடைசேஷனும் அப்படி தான்.

அதிகபட்சம் பணமதிப்பிழப்பு என்று வேண்டுமானால் சில நேரங்களில் பயன்படுத்தியிருக்கலாமே தவிர டிமானிடைசேஷன் என்கிற வார்த்தையை நாம் 2016 நவம்பர் 8க்கு பிறகு தான் அதிகம் பயன்படுத்தியிருப்போம். அதேபோல தான் கொரோனா வருகைக்கு பிறகு பல புதிய வார்த்தைகளை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளோம். அதில் ஒன்று தான் லாக்டவுன் .

கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க உலகின் பெரும்பாலான நாடுகள் லாக்டவுன் என்கிற ஊரடங்கு கட்டுப்பாட்டை விதித்தன. இதனால் ஒட்டுமொத்த உலகமும் முடங்கியது, பலகோடி தொழில்களும் பாதிக்கப்பட்டன. இதெற்கெல்லாம் காரணமான லாக்டவுன் என்கிற வார்த்தையை 2020ல் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக காலின் நிறுவனம் பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு இந்த வார்த்தை வெறும் 4 ஆயிரம் முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் லாக்டவுன் மட்டுமல்ல இன்னும் சில வார்த்தைகளும் 2020ல் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவை ஏற்கனவே நமக்கு பரிட்சயமான வார்த்தைகளாக இருந்தாலும் கொரோனா வைரஸ் காரணமாக 2020ல் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Pandemic ( பெருந்தொற்று)

கொரோனாவுக்கு முன்பே இந்த வார்த்தை அதிகம் புழக்கத்தில் உள்ளது. ஒரு தொற்றுநோய்யின் பரவல் உலகின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தினால் பெருந்தொற்று என்று அழைக்கப்படும். இதற்கு முன்னர் தொற்றுநோய்கள் நிகழ்ந்திருந்தாலும் கொரோனவைரஸ் தொற்றினால் மீண்டும் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2020 ஐ விவரிக்க நிச்சயமாக இது சிறந்த வார்த்தைகளில் ஒன்றாக இருக்கும்.

இவை தவிர முகக்கவசம்(mask), தனித்திருத்தல் (Quarantine), தனிமைப்படுத்துதல் (Isolation), அத்தியாவசியம் (Essential), சானிடைசர் (Sanitiser), ஒத்திவைக்கப்பட்டது அல்லது ரத்து செய்யப்பட்டதை குறிக்கும் விதமாக (Postponed or Cancelled), சமூக இடைவெளி (Social-distancing), அனைத்துமே ஆன்லைன் வீடியோ கால் வாயிலாக நடைபெறுவதை குறிக்கும் பொருட்டு ஜூம் (Zoom) மற்றும் இந்த பெருந்தொற்று சமயத்தில் தொற்றுநோயுடன் போராடும் முன்கள பணியாளர்களை பாராட்டும் விதமாக (Coronawarriors) எனும் வார்த்தையும் 2020ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளில் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.