சீனாவை சேர்ந்த கேமிங் மற்றும் சமூக வலைதள குழுமமான டென்சென்ட் பயனர் விவரங்கள் மற்றும் டேட்டாக்களை மிகவும் கவனமமாக பாதுகாத்து வருவதாக தெரிவித்து இருக்கிறது. முன்னதாக மத்திய அரசு சீன செயலிகளுக்கு தடை விதித்ததை தொடர்ந்து டென்சென்ட் இவ்வாறு தெரிவித்து உள்ளது.
தடை செய்யப்பட்ட செயலிகளை மீண்டும் கிடைக்க வழி செய்யும் நோக்கில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக டென்சென்ட் தெரிவித்து இருக்கிறது. இந்தியாவில் டென்சென்ட்டின் பிரபல வீடியோ கேமான பப்ஜி மொபைல் உள்பட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
கொரோனாவைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில் டென்சென்ட்டின் பப்ஜி மொபைல் இந்திய பயனர்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கு தளமாக விளங்கி வந்தது.
தடை செய்யப்பட்ட சீன செயலிகள் இந்திய அரசின் பாதுகாப்பிற்கு அச்சுறத்தலாக இருப்பதாக மத்திய தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தெரிவித்து இருக்கிறது.