Monday, March 27, 2023
Homeசெய்திகள்பொங்கல் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? போகி முதல் காணும் பொங்கல் வரை இவ்ளோ விஷயங்கள் இருக்கா!

பொங்கல் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? போகி முதல் காணும் பொங்கல் வரை இவ்ளோ விஷயங்கள் இருக்கா!

தமிழர்கள் பண்டிகை என்றால் அது தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையே ஆகும். தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் தமிழர்கள் அதிகம் வாழும் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மிக சிறப்பாக மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த பூமிக்கு ஆகாரமாகவும், அடிப்படையாகவும் விளங்கும் சூரிய பகவானுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை விவசாயிகளின் தலையாய பண்டிகை. அவர்கள் அறுவடை செய்து நெல்லை அறுத்து, அரிசி எடுத்து,பால்,நெய் சேர்த்து பானையிலிட்டு அடுப்பில் கொதிக்க வைத்து, பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து உண்டு, இன்பம் அடையும் விழாவே பொங்கல் திருநாளாகும்.

பொங்கலை எவ்வாறு கொண்டாடுகிறோம்?

உறவினர்கள்,நண்பர்கள், அனைவரையும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று, கோவில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு விளையாட்டு போட்டிகள் வைத்து அன்று மிக மிக மகிழ்வான தருணங்களாக இருக்கும். மேலும் கபடி, வழுக்கு மரம், பானை உடைத்தல், கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு விளையாட்டுகளை விளையாடுவதுடன், மக்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மேலும் ஆடல், பாடல் என ஊரே திருவிழாக் கோலம் கொள்ளும்.

1.போகி பொங்கல்
2.தைப்பொங்கல்
3.மாட்டுப்பொங்கல்
4.காணும் பொங்கல்

போகி பொங்கல்

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப வீட்டில் மற்றும் நம்மிடம் உள்ள பழைய பழக்கவழக்கங்களையும், பழைய பொருட்களையும் அகற்றி புதுமைக்குள் செல்வதற்காகவே நம் வீட்டில் உள்ள பழையவற்றை போக்கி, வீட்டை தூய்மை படுத்துவதே போகி பண்டிகை. இது தை முதல் நாளைக்கு முந்தைய நாள் கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கல்

புது பானையில் புதிய அரிசியை இட்டு பொங்கல் இடுவர். நெல் விளைய காரணமாக இருந்த சூரியனுக்கு படையலிட்டு நன்றி தெரிவிப்பர். தமிழர்களின் தனிப்பெரும் நாளான தைத்திருநாளை மக்கள் பெருமையுடன் கொண்டாடுகின்றனர்.

மாட்டுப்பொங்கல்

மூன்றாவது நாள் மாட்டுப்பொங்கலை கொண்டாடுவார்கள்.இந்நாளில் தமிழர்களின் வீர் விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் தை 2ம் நாளில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. விவசாயத்திற்கு உறுதுணையான மாட்டிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

காணும் பொங்கல்

நான்காம் நாள் காணும் பொங்கலாகும். இந்நாளில் நண்பர்களும் உறவினர்களும் ஒருவரை ஒருவர் காணும் நாளாகும்.ஒவ்வொரு ஆண்டும் தை மூன்றாம் நாளில் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. கடற்கரைகள் மற்றும் பொது இடங்களில் மக்கள் குழுமி காணும் பொங்கலை சிறப்பாக கொண்டாடுகின்றனர். சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் அன்றைய தினம் மக்கள் கூட்டம் அலைமோதும்.