Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்உலகம்விண்வெளியில் இருந்தபடி தேர்தலில் வாக்கு செலுத்தும் வீரர்கள் - மாஸ் காட்டும் யுஎஸ் அதிகாரிகள்

விண்வெளியில் இருந்தபடி தேர்தலில் வாக்கு செலுத்தும் வீரர்கள் – மாஸ் காட்டும் யுஎஸ் அதிகாரிகள்

சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் நாசா விண்வெளி வீரர் கேட் ரூபின்ஸ், விண்வெளியில் இருந்தபடி தனது வாக்கை செலுத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச விண்வெளி மைய பணிகள் ஆறு மாதங்கள் வரை நடைபெறும்.

இந்நிலையில், அமெரிக்க விண்வெளி வீரர்கள் தங்களது வாக்குகளை வராதவர்களுக்கான பாலட் முறையில் பிரத்யேகமாக செலுத்த முடியும்.

அமெரிக்காவில் 1997 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்ட விதிகளின் படி டெக்சாஸில் வசிக்கும் விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்தபடி தங்களது வாக்குகளை செலுத்த முடியும். 2016 அதிபர் தேர்தலில் எட்வார்டு மைக்கோல் பின்க் மற்றும் கிரெக் சேமிடாப் உள்ளிட்டோர் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தபடி வாக்கு செலுத்தினர்.

1997 ஆம் ஆண்டு நாசாவின் டேவிட் வொல்ப் ரஷ்ய விண்வெளி நிலையத்தில் இருந்து வாக்கு செலுத்திய முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை பெற்றார்.

விண்வெளியில் இருந்தபடி வாக்கு செலுத்த, முன்கூட்டியே பெடரல் போஸ்ட்கார்டு விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். இந்த வழிமுறையின் படி வீரர்கள், வோட்டர் ரெஜிஸ்ட்ரேஷன் மற்றும் அப்சன்டீ பாலட் ரிக்வஸ்ட் – பெடரல் போஸ்ட் கார்டு அப்ளிகேஷன் என அழைக்கப்படும் படிவத்தை சமர்பிக்க வேண்டும்.

அமெரிக்க தேர்தல் தினத்திற்கு முன் என்க்ரிப்ட் செய்யப்பட்ட பாலட் விண்வெளி வீரர்களுக்கு அப்லின்க் செய்யப்படும். பின் வீரர்கள் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட பிரத்யேக கடவுச்சொல் விவரங்களை பயன்படுத்தி தங்களின் பாலட்டை இயக்கி வாக்கு செலுத்தலாம். இறுதியில் வீரர்களின் வாக்கு டவுன்லின்க் செய்யப்படும்.