டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.
30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தீபாவளி போனஸ் தொகையை விஜயதசமி பண்டிகைக்கு முன்பே வழங்கப்படும்.
இந்த போனஸ் காரணமாக மத்திய அரசுக்கு கூடுதலாக 3737 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.