இந்திய கடற்படையில் பணியாற்றி வரும் துணை லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் துணை லெப்டினன்ட் ரிதி சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் முதல் முறையாக போர்க்கப்பல்களில் இருந்து கடற்படை ஹெலிகாப்டர்களை இயக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
கடற்படையின் அப்சர்வர் பயிற்சியை முடித்த இவர்கள் உள்பட 17 பேருக்கு நேற்று கொச்சியில் ஐ.என்.எஸ். கருடா போர்க்கப்பலில் வைத்து பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கடற்படை ஊழியர் தலைமை அதிகாரி (பயிற்சி) ஆண்டனி ஜார்ஜ் கலந்து கொண்டு பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு பட்டங்களையும், விருதுகளையும் வழங்கினார்.
இதில் ஒரு பெண் உள்பட 5 கடற்படை அதிகாரிகளும், ஒரு கடலோர காவல்படை அதிகாரியும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆன்டனி ஜார்ஜ், கடற்படை கப்பல்களில் இருந்து ஹெலிகாப்டர்களை இயக்க பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் முன்னணி போர்க்கப்பல்களில் பெண்களும் பணியாற்றும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது என கூறினார்.