Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்உலகம்நவ 2 ம் தேதி பூமியை விண்கல் தாக்க வாய்ப்புள்ளது- நாசா!

நவ 2 ம் தேதி பூமியை விண்கல் தாக்க வாய்ப்புள்ளது- நாசா!

நவ 2 ம் தேதி ஒரு சிறிய விண்கல் பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

2020 அமெரிக்க தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக இந்த விண்கல் பூமிக்கு அருகில் செல்லும் என்றும்,இது சுமார் 6.5 அடி விட்டம் கொண்ட “2018 விபி 1” என்ற விண்கல் என்றும் நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இந்த விண்கல் கடந்த 2018 இல் கலிபோர்னியாவில் உள்ள பாலோமர் ஆய்வகத்தில் கண்டறியப்பட்டது.

இந்த விண்கல் பூமியை தாக்குவதற்கு ௦.41 % மட்டுமே வாய்ப்புள்ளது, எனினும் இந்த சிறிய விண்பொருள் பூமிக்குள் நுழையும் பட்சத்தில் வளிமண்டலத்திலேயே முற்றிலும் எரிந்துவிடும். ஆகையால் இந்த விண்கல் பூமிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.