Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்சூளகிரி அருகே லாரியில் கொண்டு சென்ற பத்து கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!

சூளகிரி அருகே லாரியில் கொண்டு சென்ற பத்து கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே லாரியில் கொண்டு சென்ற பத்து கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரம்பத்தூரில் உள்ள சியோமி செல்போன் நிறுவனத்திலிருந்து மும்பைக்கு கூரியர் லாரி மூலம் விலையுர்ந்த செல்போன்கள் அனுப்பப்பட்டது. இந்த லாரி சூளகிரியை அடுத்த மேழுமலையை கடக்கும் போது மர்மநபர்கள் லாரியை மறித்து ஓட்டுனரை அடித்து கட்டி போட்டு லாரியின் பின்பக்க கதவை உடைத்து, 7500 செல்போன்களை கொள்ளைடுத்து சென்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களின் மொத்த மதிப்பு பத்து கோடி என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது மத்திய பிரதேசத்தை சேர்ந்த கொள்ளையர்கள் என தெரியவந்துள்ளது.

கூரியர் லாரியை பின்தொடர்ந்து மற்றறொரு லாரியில் சென்ற கொள்ளையர்கள் கூரியர் லாரியை முந்துவதுபோல் சென்று மடக்கி ஓட்டுனரை தாக்கி, முகத்தை மூடி அருகில் இருந்த புதரில் தள்ளிவிட்டுள்ளனர். பின்னர் இரண்டு மணிநேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இந்த சமயத்தில் கூட்டாளிகள் செல்போன்களை கொள்ளை அடித்து தாங்கள் வந்த லாரிக்கு மாற்றி கடத்தி சென்றுள்ளனர்.

இதே சியோமி நிறுவனத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி மும்பைக்கு கொண்டு சென்ற 8 கோடி மதிப்பிலான செல்போன்களை தமிழக ஆந்திர எல்லை சித்தூரில் மடக்கி கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களை பங்களாதேஷ் நாட்டில் விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.