மலிவு விலை கொரோனா பரிசோதனை சாதனம் – விரைவில் அறிமுகம் செய்ய டாடா குழுமம் திட்டம்
டாடா குழுமம் மற்றும் CSIR-IGIB இணைந்து கொரோனாவைரஸ் பாதிப்பை கண்டறியும் ஃபெலுடா எனும் சாதனத்தை உருவாக்கி இருக்கின்றன. இதனை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது.
இந்த பரிசோதனை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, அதிநவீன CRISPR எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது. இது SARS-CoV-2 வைரசை கண்டறியும் திறன் கொண்டது ஆகும்.
Also Read: வைட்டமின் டி மற்றும் கொரோனா வைரஸ்- இப்படி ஒரு தொடர்பு இருக்கா?
CSIR-IGIB மற்றும் டாடா CRISPR பரிசோதனை முறைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்து இருக்கிறது. இந்த பரிசோதனை முறை 96 சதவீதம் தரமாகவும், 98 சதவீதம் துல்லியமாகவும் கொரோனா வைரசை கண்டுபிடிக்கிறது.
டாடா CRISPR பரிசோதனை வழக்கமான RT-PCR பரிசோதனையை விட அதிக துல்லியமாக செயல்படுகிறது. மேலும் இது அதிக துல்லியமான முடிவுகளை குறைந்த நேரத்தில் வழங்குகிறது. இதற்கு பயன்படுத்தப்படும் உபகரணம் குறைந்த விலையில் கிடைக்கிறது.
இந்த பரிசோதனை முறை எதிர்கால தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இதனை பல்வேறு வகையான வைரஸ்களையும் கண்டறியும் படி மாற்றியமைக்க முடியும்.