Monday, May 29, 2023
Homeசெய்திகள்தமிழ்நாடுபெற்றோர்களே.. தேர்வு எழுதும் பசங்களுக்கு என்ன பண்ணனும் தெரியுமா..?

பெற்றோர்களே.. தேர்வு எழுதும் பசங்களுக்கு என்ன பண்ணனும் தெரியுமா..?

தேர்வு என்றாலே மாணவர்களுக்கு ஒரு வித பதற்றம் ஒட்டிக்கொள்ளும். பொதுத்தேர்வு என்றால் சொல்லவே வேண்டாம். பள்ளி பொதுத்தேர்வுக்கு தேர்வால் அவர்களுக்கு வரும் பதற்றத்தை காட்டிலும் பெற்றோர்களாலும், உறவினர்களாலும் வரும் பதற்றமே மிகப்பெரிய அழுத்தத்தை அளிக்கிறது. இதனால், தேர்வு எழுதும் மாணவர்களின் மனநிலை அறிந்து பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

பதற்றம் வேண்டாம்

தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை விட பெற்றோர்கள் பதற்றமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். தங்களுடைய கவலைகளை எக்காரணத்தை கொண்டும் பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது. பொதுத்தேர்வு நேரங்களில் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவை சமைத்து கொடுங்கள். வெளியில் வாங்கி சாப்பிடும் உணவுகளால் சில நேரங்களில் வயிற்று கோளாறு ஏற்பட்டு தேர்வு எழுதுவதில் தடை ஏற்படலாம். இதனால், பெரும்பாலும் வெளி உணவுகளை வாங்கித் தருவதை தவிர்த்துவிடுவது நல்லது ஆகும்.

மாணவர்களுக்கு ஆழ்ந்த தூக்கமும், படிக்கும் பொழுது இடையிடையே சிறு சிறு ஓய்வும் அவசியம். இதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது தேர்வு எழுதுவதே ஆகும். தேர்வு அறையில் பதற்றமின்றி தேர்வை ஆரம்பிக்காமல், சில நொடிகள் மூச்சை இழுத்து மெதுவாக வெளியே விட்டு மனதை ஒருநிலைப்படுத்திய பிறகு தேர்வை தொடங்க சொல்லுங்கள். இப்படி செய்யும்போது மன அழுத்தம் குறையும். சாந்தமான மனநிலையில் தான் படித்தது எல்லாம் அவர்களுக்கு நினைவிற்கு வரும்.

உத்வேகம்

தேர்வு அறைக்குள் செல்லும்போதுதான் பதற்றம் இருக்கும். எழுத தொடங்கிவிட்டால் பதற்றம் குறைந்துவிடும் என்று கூறி, மாணவர்களை தன்னம்பிக்கையோடு தேர்வு எழுத அனுப்புங்கள். நன்றாக படிக்கும் மாணவர்களோ, சுமாராக படிக்கும் மாணவர்களோ அவர்களை தேவையின்றி பயமுறுத்தலுக்கோ, வீண் அழுத்தத்திற்கோ ஆளாக்கக்கூடாது. சுமாராக, ஜஸ்ட் பாஸ் ஆகும் நிலையில் உள்ள மாணவர்களிடம் உன்னால் முடியும் என்று தன்னம்பிக்கை அளித்து அவர்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும்.

ALSO READ | பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களா நீங்கள்..! உங்க பிள்ளைகளுக்கு என்ன சாப்பாடு தருவது?