Tuesday, May 23, 2023
Homeசெய்திகள்தமிழ்நாடுப்ளஸ் 2 தேர்வு.. காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு பெரிய தண்டனை.. என்ன தெரியுமா?

ப்ளஸ் 2 தேர்வு.. காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு பெரிய தண்டனை.. என்ன தெரியுமா?

சென்னை: தமிழ்நாடு முழுக்க நாளை ப்ளஸ் 2 பொதுத்தேர்வு நடக்க உள்ளது. இதற்காக பல கட்டுப்பாட்டு விதிகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

ப்ளஸ் 2 பொதுத்தேர்விற்காக நாளை தமிழ்நாடு முழுக்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து பள்ளிகளுக்கு மின்சார தடை இல்லாமல் மின்சார சேவை வழங்க வேண்டும் என்று மின்சாரத்துறை துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுக்க  8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ – மாணவிகள் இந்த தேர்வை எழுத உள்ளனர். நாளை தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை தேர்வு நடக்க உள்ளது. இதையடுத்து மாணவ, மாணவியர் இந்த தேர்வுகளில் காப்பி அடிக்க கூடாது. வாழ்க்கையை வீணடிக்க கூடாது, எதிர்காலத்தை பாழாக்க கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

முறைகேடு

இதற்கான முறைகேடு லிஸ்டுகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

அதில் காப்பி அடிக்க கூடாது, துண்டு தாள் கொண்டு வர கூடாது, புத்தகங்களை எடுத்து வர கூடாது, மினி ஜெராக்ஸ் கொண்டு வர கூடாது, போன் கொண்டு வர கூடாது, விடை தாள்களை மாற்ற கூடாது போன்ற விதிகளை அறிவித்து உள்ளனர்.

இதை மீறினால் ஓராண்டு பொதுத்தேர்வு எழுத தடைவிதிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு அவர்கள் அதற்கு முன் எழுதிய தேர்வுகள் , அதற்கு பின் எழுதிய தேர்வுகள் எல்லாம் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்படும். இதன் காரணமாக  மாணவ, மாணவியர் இந்த தேர்வுகளில் காப்பி அடிக்க கூடாது. வாழ்க்கையை வீணடிக்க கூடாது, எதிர்காலத்தை பாழாக்க கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.