Wednesday, May 31, 2023
Homeசெய்திகள்தமிழ்நாடு8 மாவட்டங்களில்.. அடுத்த 5 நாட்களுக்கும் மழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை

8 மாவட்டங்களில்.. அடுத்த 5 நாட்களுக்கும் மழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 7 மாவட்டங்களுக்கு இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கோடை வெயிலுக்கு இடையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இப்படி திடீரென மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்தான் சென்னையில் இன்றும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

சென்னை மட்டுமின்றி 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தருமபுரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் லேசான மழை பெய்து வருகிறது. அதேபோல் திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் சற்று நேரத்தில் மழை பெய்யும்.

மேலும் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது, புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 19.03.2023 மற்றும் 20.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ALSO READ | மாணவர்களே.. பொதுத்தேர்வுக்கு எந்த நேரத்தில் படிப்பது சிறந்து..?