Thursday, June 1, 2023
Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோடு கிழக்கில் அதிமுக தோற்க காரணமே இதுதான்.. பாய்ந்து வந்த டிடிவி தினகரன்.. என்னாச்சு?

ஈரோடு கிழக்கில் அதிமுக தோற்க காரணமே இதுதான்.. பாய்ந்து வந்த டிடிவி தினகரன்.. என்னாச்சு?

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைய எடப்பாடி பழனிசாமியின் ஆணவம்தான் காரணம் என்று டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் முடிவுகள் அதிமுகவை அதிர்ச்சி அடைய செய்துள்ளன. வரிசையாக தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இந்த இடைத்தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து உள்ளது. 66575 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகளை பெற்று வென்றுள்ளது. 16000 பேர் வாக்களித்த தேர்தலில் 1,10,556 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்றுள்ளார்.

காங்கிரஸ் அதிமுகவை எதிர்த்து பெற்ற வாக்குகளில் இது மிக மிக அதிகம் ஆகும். இதில் காங்கிரஸ் 64.6% வாக்குகளை வென்றுள்ளது. கடந்த முறையை விட 20 சதவிகிதம் அதிகமான வாக்குகளை காங்கிரஸ் இந்த முறை பெற்றுள்ளது. இன்னொரு பக்கம் 20 சதவிகித வாக்குகளை அதிமுக இழந்து உள்ளது. அதிமுக வெறும் 25.75% வாக்குகளை மட்டுமே வென்றுள்ளது.

TTV Dinakaran upset with Edappadi Palanisamy for losing Erode East by election

அதிமுக வேட்பாளர் 43,981 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைய எடப்பாடி பழனிசாமியின் ஆணவம்தான் காரணம் என்று டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.

எடப்பாடி யார் பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார். அவர் தன் மனம் போன போக்கில் செயல்படுகிறார். அதுதான் அவரின் இந்த தோல்விக்கு காரணம். திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஆனாலும் கூட எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவை வெற்றிபெற வைக்க முடியவில்லை. அப்படி என்றால் தவறு அவர் மீதுதான். அவர் ஆணவத்தோடு இருக்கிறார், என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ALSO READ | எல்லாம் எடப்பாடி செஞ்ச தப்பு.. ஈரோடு கிழக்கால் அப்செட் ஆன அதிமுக மாஜிக்கள்.. என்னாச்சு?