Thursday, June 1, 2023
Homeசெய்திகள்தமிழ்நாடுபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களா..? இப்படி படியுங்க ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்..!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களா..? இப்படி படியுங்க ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்..!

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வு என்றாலே வீடுகளில் இருந்தும், பள்ளிகளில் இருந்தும் மாணவர்களுக்கு ஒருவித அழுத்தம் உண்டாகிறது. இதன் காரணமாகவே பலரும் பதற்றத்திற்கு ஆளாகின்றனர்.

பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு குடும்பத்தாரும், ஆசிரியர்களும் அழுத்தத்தில் இருந்து விடுபட உதவியாக இருக்க வேண்டும். வாழ்வில் நாம் அடுத்தகட்டத்திற்கு அதாவது உயர்கல்விக்கு செல்வதற்கு இந்த பொதுத்தேர்வுகள் முக்கிய பங்கு வகிக்கிறது, இதனால், பதற்றமின்றி தேர்வு எழுதினாலே மாணவர்கள் வெற்றி பெற முடியும். பொதுத்தேர்வுக்கு மிக எளிதாக படிக்கும் முறையை கீழே காணலாம்.

படிக்கும் முறை :

  • பொதுவாக வாய்விட்டு படிக்க வேண்டும். இல்லையெனில் ல, ள, ர, ற, ன, ந, ண உச்சரிப்பு பிரச்சனைகள் ஏற்பட்டு தேர்வுத்தாளிலும் அவற்றை தவறாகவே எழுத நேரிடும்.
  • படிப்பதற்கு முன்பு நன்றாக மூச்சை உள்ளிழுத்து, கண்களை மூடி, சில நிமிடங்கள் தியானம் செய்வது மனதை ஒருமுகப்படுத்தும்.
  • வாய்விட்டு படிப்பது எவ்வளவு சிறந்ததோ, படித்தவற்றை எழுதிப் பார்த்து திருத்தி கொள்வது அதைவிட இன்னும் சிறந்தது.
  • கணிதம், இயற்பியல், வேதியியல் பாட சூத்திரங்களை மனப்பாடம் செய்வதை விட எழுதி பார்த்து பயிற்சி மேற்கொள்வது நல்லது.
  • மாணவர்கள் பாட ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு தனக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவாக்கி கொள்ள வேண்டும்.
  • எளிதான பாடங்களை இறுதிக்கட்டத்தில் படித்து கொள்ளலாம் என முடிவு செய்து, கடினமான பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
  • புத்தகங்களைப் பார்த்து மனப்பாடம் செய்துகொண்டே இருக்காமல், படித்ததை மனதிற்குள் சொல்லி பார்ப்பது நல்லது.
  • கண் விழித்து நீண்ட நேரம் படிப்பதை நிறுத்திவிட்டு, ஆழ்ந்த உறக்கத்திற்கு பின் அதிகாலையில் படிப்பை தொடர்வது நன்று.
  • தேர்வு அறையில், வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் விடையளிக்க தேவைப்படும் கால அவகாசத்தை முன்பே திட்டமிட்டு கொள்வது நல்லது.
  • படிப்பதற்கு தகுந்த சூழல் மிகவும் அவசியம் ஆகும். சிலருக்கு மாலை நேரத்திலும், சிலருக்கு காலைநேரத்திலும் படிக்க வரும். எது உங்களுக்கு தகுந்ததாக இருக்கிறதோ அதை தேர்வு செய்து படியுங்கள்.
  • மொட்டை மாடி, பள்ளி நூலகம் போன்ற தொந்தரவு இல்லாத இடங்களை தேர்வு செய்யலாம்.