Friday, May 26, 2023
Homeசெய்திகள்தமிழ்நாடு12ம் வகுப்பு மாணவர்களே..! தேர்வு முடியும் வரை இதையெல்லாம் ‘அவாய்ட்’ பண்ணுங்க..!

12ம் வகுப்பு மாணவர்களே..! தேர்வு முடியும் வரை இதையெல்லாம் ‘அவாய்ட்’ பண்ணுங்க..!

பள்ளி மாணவர்களின் வாழ்விலே மிகவும் முக்கியமான தருணம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகும். பள்ளி வாழ்க்கையில் இருந்து கல்லூரி வாழ்க்கையில் செல்வதற்கு மிகவும் முக்கியமான அங்கமான இந்த பொதுத்தேர்வின்போது மாணவர்கள் தங்களது கவனங்களை சிதறடிக்கும் விஷயங்களையும், ஆரோக்கியத்திற்கு தீங்கான விஷயங்களையும் தவிர்ப்பது நல்லது ஆகும்.

இதனால், 12ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் கீழ்க்கண்ட விஷயங்களை தவிர்த்துவிடுவது நல்லது ஆகும்.

தவிர்க்க வேண்டியவை:

  • அதிகமாக டீ, காபி போன்ற பானங்கள் தூக்கம் வராமல் தடுக்கும் என்று பெற்றோர்கள் மாணவர்களுக்கு அளிக்கலாம். ஆனால், அதிகளவில் அளிக்க வேண்டாம். அவை உடலையும், மனதையும் மந்தமாக்க வாய்ப்புண்டு. இதனால், படிப்பில் கவனம் செல்லாத நிலை ஏற்படும்.
  • தேர்வு முடியும் வரை சினிமா, டிவி, செல்போன், இணையதளம் உள்ளிட்ட பொழுதுபோக்கு விஷயங்களுக்கு ஓய்வு கொடுத்துவிடுவது நல்லது.
  • ஏனென்றால் தற்போதைய காலகட்டத்தில் தொலைக்காட்சியை காட்டிலும் செல்போன்களும், சமூக வலைதளங்களுமே நேரத்தை அதிகளவில் உண்கிறது. இதனால், பொதுத்தேர்வு நேரத்தில் மட்டும் அதை ஓரங்கட்டுவது நல்லது ஆகும்.
  • தேர்வு நேரங்களில் எண்ணெய் மற்றும் கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது ஆகும். ஏனென்றால், இதனால் வயிற்றுக்கோளாறு உள்ளிட்ட தேவையற்ற உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும். இது தேர்வுக்கு தயார் ஆவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.
  • எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவினை உட்கொள்ளுதல் நல்லது. அதேபோல் பட்டினி இருப்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.
  • தேர்வுக்கு தயாராகும்போது குழுவாக இணைந்து தயாரானாலும், தேர்வுக்கு ஒரு வாரம் இருக்கும் பொழுதிலிருந்து தனியாக படிப்பதே சிறந்தது. இதனால் தேர்வு நேரங்களில் குழுவாக இணைந்து படிப்பதை தவிர்ப்பது நல்லது ஆகும்.
  • தேர்வு நேரங்களில் தேவையின்றி வெளியூர் பயணங்கள் செல்வது, உறவினர்கள் இல்ல விழாவிற்கு செல்வது போன்றவற்றில் மாணவர்களை பெற்றோர்கள் அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். இது மாணவர்கள் தேர்வுக்கு தயார் ஆவதை மிகவும் சிரமத்திற்குரிய விஷயம் ஆக்கிவிடும்.

தேர்வு காலத்தில் மேலே கூறியவற்றை தவிர்த்தால் படிப்பில் முழு கவனமும் சென்று, அவர்கள் தேர்வையும் சிறப்பாக எழுதுவார்கள். இதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.