சென்னை: கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்க தொடங்கி உள்ள நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களுக்கு முக்கியமான அட்வைஸ் ஒன்றை வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பில், நேற்று 16/03/2023 தமிழ்நாட்டின் மின் நுகர்வு 18,053 MW ஆகும். முதன்முறையாக 18,000 மெகா வாட்டுக்கும் அதிகமாக மின் நுகர்வு உச்சம் தொட்டுள்ளது. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது.
இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு 15/03/2023ல் 17,749 MW என்று குறிப்பிட்டார். அதற்கு முன்பாக 5/03/2023 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக மெகாவாட் அளவில் 17,749 MW. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. 14/03/2023 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக மெகாவாட் அளவில் 17,705 MW. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது.
இப்படி தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி மற்றும் நுகர்வு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்காக பல விதமான மின்சார உற்பத்தி முறைகளை கையாண்டு வருகிறது. மின்சார நுகர்வில் தமிழ்நாடு நேற்று புதிய ரெக்கார்ட் படைத்து இருக்கிறது. இந்த நிலையில் மக்கள் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த வேண்டும்.
கோடை காலத்தில் மின் தேவை மேலும் அதிகரிக்கும். அப்போது மின்தடை ஏற்பட வாயப்பு உள்ளது. அதனால் இப்போதே மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுரை வழங்கி உள்ளது .
ALSO READ | தப்பி தவறிக் கூட இப்படி பண்ணிடாதீங்க.. நிர்வாகிகளுக்கு திமுக ஸ்ட்ரிக்ட் ஆர்டர்