சென்னை: தமிழ்நாடு நேற்று தமிழ்நாட்டில் மின்சார நுகர்வில் தமிழ்நாடு நேற்று புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்து உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.
மின்சார உற்பத்தி மற்றும் நுகர்வு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்காக பல விதமான மின்சார உற்பத்தி முறைகளை கையாண்டு வருகிறது.
மின்சார நுகர்வில் தமிழ்நாடு நேற்று புதிய ரெக்கார்ட் படைத்து இருக்கிறது. அதன்படி நேற்று 10/03/2023 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக மெகாவாட் அளவில் 17,647 MW. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது.
இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு 04/03/2023ல் 17,584 MW என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார். இதையடுத்து சூரிய ஒளி மின்சாரத்தில் கவனம் செலுத்த உள்ளதாக மின்சாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 20000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த பேட்டியில், மாநில முன்னேற்றத்தின் முன்னத்தி ஏர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் நல்லாட்சியில், இதுவரை இல்லாத அளவில், சூரிய ஒளி மின் உற்பத்தி, (01/01/2023 – 13:00 Hrs) 4317.30 MW அளவில் உச்சம் தொட்டு இருக்கிறது, என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் மீண்டும் சூரிய ஒளி மின் உற்பத்தி, நேற்று (26/02/2023 – 01:00 Hrs) 4866 MW அளவில் உச்சம் தொட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.