மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருமணத்தில் தம்பதிகளுக்கு விறகடுப்பு பரிசாக வழங்கப்பட்டது
திருமணத்தின் போது பரிசுகள் வழங்குவது வடிக்கையான ஒன்றுதான். குறிப்பாக தென் மாவட்டங்களில் ரொக்கமான மொய் வைப்பது தன்மானம் சம்மந்தபட்ட விஷயமாக கருதப்படும். உறவினர்களின் நெருக்கத்தைக எடுத்து காட்டும் விதமாக இந்த மொய் கலாச்சரம் கருதப்படுகிறது. இதில் சற்று விதி விலக்காக நண்பர்கள் வித்தியாசமன முறையில் பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போதெல்லாம் திருமண வைபவங்களில் ட்ரெண்டிங் பரிசுகளை வழங்கி சமூக வலை தளங்களில் வைரலாகி விடுகின்றனர். வெங்காய விலை எகிறிய போது, மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசாக வழங்கினர். அதுபோல தான் சீர்காழியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்து வருதை கருத்தில் கொண்டு, திருமணமான தம்பதிகளுக்கு பழைய முறையிலான விறகுகள் மற்றும் மண் அடுப்பு ஒன்றை நண்பர்கள் பரிசாக வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். மேலும் சமூக வலைதங்களில் உலா வரும் வடிவேலு வசனத்தை எடிட் செய்து மணமேடையில் மணமக்கள் முன்பு திரையிட்டு காண்பித்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது. சமீப நாட்களில் திருமண விழாவிக்களில் நணபர்கள் செய்யும் குறும்புத்தனங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது