Monday, May 29, 2023
Homeசெய்திகள்தமிழ்நாடுசெல்லூர் ராஜுவிற்கு இப்படி திமிரா பேச தகுதி இருக்கா? யாருங்க அவரு? விளாசிய அமர் பிரசாத்...

செல்லூர் ராஜுவிற்கு இப்படி திமிரா பேச தகுதி இருக்கா? யாருங்க அவரு? விளாசிய அமர் பிரசாத் ரெட்டி

சென்னை:  அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர் செல்லூர் ராஜுவிற்கு பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்

பாஜக அதிமுக இடையிலான மோதல் தற்போது உச்சத்தில் உள்ளது. இரண்டு தரப்பு நிர்வாகிகளும் மாறி மாறி அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்ததுதான் இந்த மோதலுக்கு காரணம்.

இதனால் எடப்பாடி உருவ பொம்மையை கூட பாஜகவினர் எரிக்கும் நிலையில் மோதல் சென்றுள்ளது. நேற்று இதை  விமர்சனம் செய்த அதிமுக மேஜை அமைச்சர் செல்லூர் ராஜு, மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ள கூடாது. பாஜகவினரிடம் சகிப்புத்தன்மை இல்லை என்று கூறினார்.  பாஜகவினரிடம் சகிப்புத்தன்மை இல்லை. மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ள கூடாது, என்று கண்டித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று செல்லூர் ராஜுவிற்கு பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். அதில், வாய்க்கொழுப்பின்றி பேசுவது; திமிரின்றி நடந்து கொள்வது என்பது குறித்தெல்லாம் வகுப்பெடுக்க மதுரையில் விரைவில் கல்லூரி துவங்கப் போறாராம் செல்லூர் ராஜு. நெருங்கிய நட்பில் இருக்கும் யாராவது அங்க ஒரு ’சீட்’ வாங்கிக் கொடுங்கப்பா!

இத்தனை நாட்கள் தெர்மகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக் கூடாது என பா.ஜ.,வுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது.

அ.தி.மு.க., தொண்டர்கள் கோபப்பட்டால், பா.ஜ. க, தாங்காதுன்னு ஜெயக்குமார் அண்ணன் சொல்லியிருக்காங்க. இந்தக் கோபம் ஈரோடு தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்ட தி.மு.க., மேல வரலையே அண்ணா!, என்று கூறி உள்ளார்.

ALSO READ | நிர்மல் குமாரை தொடர்ந்து.. அண்ணாமலையை விளாசிய திலீப் கண்ணன்.. பாஜகவில் இருந்து விலகல்