Saturday, May 27, 2023
Homeசெய்திகள்தமிழ்நாடுபிரமாதம்.. வி.வி.ஐ.பி. வரிசையில் சாமானியர்கள்..! குடியரசு தின விழாவில் கவுரவம்..!

பிரமாதம்.. வி.வி.ஐ.பி. வரிசையில் சாமானியர்கள்..! குடியரசு தின விழாவில் கவுரவம்..!

இந்தியாவின் குடியரசு தினம் நாளை பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி ராஜபாதையில் முப்படைகளின் கண்கவர் அணிவகுப்புகளுடன் நாட்டின் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் நேற்றே இந்தியா வந்தடைந்து விட்டார்.

வி.வி.ஐ.பி. வரிசையில் சாமானியர்கள்

நாட்டின் வளர்ச்சியிலும் ,மக்கள் வாழ்க்கையிலும் முதுகெலும்பாய் விளங்குபவர்கள் சிறு, சிறு வியாபாரிகள், காய்கறி விற்பவர்கள், கடைக்காரர்கள் என பல சில்லரை வணிகர்கள். இந்த நிலையில், நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் அவர்களை கவுரவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், நாளை வி.வி.ஐ.பி. வரிசையில் ரிக்ஷா வண்டி ஓட்டுபவர்கள், சிறு வியாபாரம் செய்துவரும் காய்கறி கடைக்காரர்கள், மளிகை கடைக்காரர்கள் அமர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா நெறிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தண்டு பார்வையாளர்களுக்கான மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 45 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில் 32 ஆயிரம் இருக்கைகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது.

பழங்குடியினர் விவகாரங்கள் துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்புகளில் இடம்பெற உள்ளன. 18 ஹெலிகாப்டர்கள், 8 போக்குவரத்து விமானங்கள், 23 போர் விமானங்கள் பங்கேற்கின்றன.

எகிப்து அதிபர்

எகிப்து நாட்டின் அதிபர் அல் சிசி சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், எகிப்து சார்பில் 120 பேர் கொண்ட சிறப்பு அணிவகுப்பு ஒன்றும் நடக்க உள்ளது.
நாளை நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் டெல்லியில் நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்ற உள்ளார். இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் அந்தந்த மாநில ஆளுநர்கள் கொடியேற்ற உள்ளனர். தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியேற்ற உள்ளார். தமிழ்நாட்டிலும் நாளை கண்கவர் அணிவகுப்புகளும், பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இந்த விழால் பல்வேறு பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.