Friday, May 26, 2023
Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிகரிக்கும் மர்ம காய்ச்சல் கேஸ்கள்.. ரொம்ப கவனமா இருங்க.. இதெல்லாம் முக்கியம்.. ராமதாஸ் எச்சரிக்கை

அதிகரிக்கும் மர்ம காய்ச்சல் கேஸ்கள்.. ரொம்ப கவனமா இருங்க.. இதெல்லாம் முக்கியம்.. ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: நாடு முழுக்க வேகமாகப் பரவும் சளி, இருமலுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் தொடர்பாக பொதுமக்களுக்கு  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார்.

இந்தியாவில் முக்கியமாக சென்னையில் திடீரென மர்ம காய்ச்சல் கேஸ்கள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள், வயதானவர்கள், இளைஞர்கள் என்று வயது வித்தியாசம் இன்றி இந்த காய்ச்சல் ஏற்படுகிறது . பலருக்கு உடல் வலி, காய்ச்சல், சளி பிரச்சனை திடீர் திடீர் ஏற்பட தொடங்கி உள்ளது.

ப்ளூ காய்ச்சல் Influenza A subtype H3N2தான் இந்த பரவலுக்கு காரணம் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில்தான், இந்த வைரஸ் காய்ச்சல் தொடர்பாக பொதுமக்களுக்கு  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார். அதில்,  இந்தியாவில் A H3N2 வகைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு கூறியுள்ளது. இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது!

Health benefits of Pappaya

A H3N2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூச்சுத் திணறல், நிமோனியா போன்றவை தாக்கக் கூடும். பலருக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய தேவை ஏற்படக்கூடும்.  மொத்தத்தில் இப்போது ஏற்பட்டுள்ள சூழலை மிகவும் எச்சரிக்கையுடனும்,  விழிப்புடனும் எதிர்கொள்ள வேண்டும்! கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், கூட்டத்தை தவிர்த்தல், மூக்கு மற்றும் கண்களை தொடாமல் இருத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்களிடம் செல்லாமல் தாமாக ஆண்டி பயாடிக் மருந்துகளை எடுக்கக்கூடாது!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கையும் நூறைத் தாண்டியுள்ளது. இது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தொடக்க நலவாழ்வு மையங்கள் வாயிலாக மருத்துவ பாசறைகளை நடத்தவும்  ஏற்பாடு செய்ய வேண்டும், என்று தெரிவித்து உள்ளார்.

ALSO READ | உடல் வலிமையாக இருக்க வேண்டுமா..? இதையெல்லாம் இனி சாப்பிடுங்க..!