பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவைகள் நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவின் மிகச்சிறந்த அடையாளங்களில் ஒன்று தான் பாம்பன் ரயில் பாலம். இந்தியாவில் மிக ஆபத்தான ரயில் பயணம் என வரையறுக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவடத்தில் மண்டபம் கரைப்பகுதியையும், இராமேஸ்வரம் தீவு பகுதியை இணைப்பது இந்த ரயில் பாலம்தான். இந்தியாவில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட முதல் ரயில் பாலம் இது. பாம்பன் பாலம் கட்டுவதற்கான முயற்சி 1800 இன் இறுதியில் தொடங்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு இலங்கையுடனான தனது வணிக பயன்பாட்டு நோக்கத்திற்காக இந்த பாலம் கட்டுவதற்கு முடிவு செய்தது.
அதன்படி மன்னார் வளைகுடா பகுதியில் சுமார் 2.2 கிமீ தொலைவுக்கு பாலம் கட்ட யோசனை முன்வைக்கப்பட்டு, வேலைகள் தொடங்கப்பட்டது. 1988 வரை மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியை இணைத்தது பாம்பன் ரயில் பாலம் மட்டுமே. அதே நேரம் கப்பல்கள் கடந்தது செல்ல ஏதுவாக, ரயில் பாலத்தில் மேல்நோக்கி திறக்கும் வகையில் பாலம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
ALSO READ | சீர்காழியில் சிறப்பான சம்பவம்…ஆச்சரியத்தில் ஆழ்த்திய நண்பர்களின் திருமண பரிசு!
சுற்றலா மற்றும் வணிக நோக்கில் இராமேஸ்வரம் வளர்ச்சியடைந்ததற்கு பாம்பன் பாலம் முக்கிய அங்கமாக திகழ்ந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் 100-வது ஆண்ட கொண்டாடப்பட்டது. இந்நிலையில், பாம்பன் ரயில் பாலத்தில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு, சீரமைப்பு பணிகள் நடைபெறும். இதையடுத்து கடலில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே சமயம், தற்போது ரயில்கள் மண்டபம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. புதிய பாலத்தின் பணிகள் ஜூன் அல்லது ஜூலையில் முடிவடைந்த பிறகு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
நூற்றாண்டு கண்ட பாம்பன் ரயில் பாலம் தற்போது போக்குவரத்துக்கு ஏற்றதல்ல என பொறியியளாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் நினைவுச் சின்னமாக மாற இருக்கிறது பாம்பன் பழைய ரயில் பாலம்
ALSO READ | இந்தியாவுக்காகவும், பாகிஸ்தானுக்காகவும் கிரிக்கெட் விளையாடுனவங்க யார்? யார்? தெரியுமா.?