Monday, September 27, 2021
Home செய்திகள் சென்னை பல்லாவரம் மேம்பாலம் செப் .17 ஆம் தேதி திறப்பு!

சென்னை பல்லாவரம் மேம்பாலம் செப் .17 ஆம் தேதி திறப்பு!

சென்னை: பல்லாவரம் மேம்பாலம் செப் .17 ஆம் தேதி திறக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று திறந்து வைத்தார்.

இந்த பாலம் கட்டுவதற்கான அறிவிப்பை கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் மேம்பாலப் பணிகள் தொடங்குவதற்கே 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு ரூ 82 .6 கோடி செலவில் பல்லாவரத்தில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. பின்னர் 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் தான் கட்டுமான பணிகள் சூடுபிடிக்க தொடங்கியது.

பல்லாவரம் ரேடியல் சாலையிலிருந்து சென்னை விமான நிலையம் வரையில் 1 .53 கிலோமீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவந்தன. பல்லாவரத்தில் ஜிஎஸ்டிசாலை, சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து மூன்று வழி பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் சாலை வழியாக குன்றத்தூர் சாலைக்கு செல்லும் வாகனங்களாலும், விமான குன்றத்தூர் சாலைக்கு செல்லும் வாகனங்களாலும் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. ஆனால் இப்போது இந்த மேம்பாலத்தை திறப்பதன் மூலம் பல்லாவரம் – ஜி.எஸ்.டி சாலையில் ஏற்பட்டு வரும் கடும் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மேம்பாலம் கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது. அதையடுத்து இந்த மேம்பாலத்தை 17 ஆம் தேதி முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அன்றைய தினமே வண்டலூரில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தையும் முதலமைச்சர் பழனிச்சாமி திறந்து வைத்தார். கேளம்பாக்கம் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சுமார் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வண்டலூர் மேம்பாலம் கட்டப்பட்டது. 711 மீட்டர் நீளம், 23 மீட்டர் அகலம் கொண்ட ஆறு வழி சாலை மேம்பாலம் இதுவாகும்.

பாலத்தை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், வண்டலூர் மேம்பாலம் சுமார் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று வழிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்லாவரத்தில் திறக்கப்பட்ட மேம்பாலம் மூலம் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, முற்றிலும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும். கொரட்டூர் வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை 29 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 20ம் தேதிக்குள் அந்த பாலம் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.

93.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் கோயம்பேடு சந்திப்பு மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு இதுவரை 75 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. முழு பணிகள் முடிவடைந்து டிசம்பர் மாதம், மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக நீண்ட காலமாக சிரமப்பட்டு வந்த சென்னை புறநகர் மக்களுக்கு பல்லாவரம், வண்டலூர் மற்றும் கோயம்பேடு மேம்பாலங்கள் ஒரு நிரந்தர தீர்வாக இருக்கும் என நம்பப்படுகிறது.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments