Saturday, May 27, 2023
Homeசெய்திகள்தமிழ்நாடுபழனிக்கு காவடி தூக்கிச் செல்வது ஏன் தெரியுமா?

பழனிக்கு காவடி தூக்கிச் செல்வது ஏன் தெரியுமா?

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் இன்று குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. பழனி முழுவதும் பக்தர்களின் அரோகரா கரகோஷம் விண்ணைப் பிளந்து வருகிறது.

இடும்ப அரக்கன்:

பல்வேறு காரணங்களால் பழனி மலைக்கோவிலில் குடமுழுக்கு விழாவில் 2 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், அடிவாரத்திலும் மலையைச் சுற்றிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி முருகனை தரிசித்து வருகின்றனர்.
நவபாஷண சிலை, கோபித்து வந்த முருகன், அவ்வை மூதாட்டி, போகர் சித்தர் என்று ஏராளமான தனிச்சிறப்புகள் நிறைந்த பழனி முருகன் ஆலயத்தில் உள்ள மற்றொரு சிறப்பு இடும்பன். மலைக்கு சென்று முருகனை தரிசிப்பதற்கு முன்பு இடும்பனை அனைவரும் வணங்கிச் செல்கின்றனர், பழனி மலைக்கு செல்லும் வழியில் இடும்பனின் சந்நிதி இருக்கிறது. இடும்பனுக்கு அதிகாலையில் முதலில் பூஜைகள் செய்யப்பட்ட பிறகே, மலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுதுகிறது.

யார் இந்த இடும்பன்? காவடி தூக்கிச்செல்வது ஏன்?

முற்காலத்தில் வாழ்ந்த இடும்பன் எனும் அரக்கன் தனது தோளில் ஒரு கட்டையில் சக்திகிரி, சிவகிரி என்ற மலைகளை தூக்கி சென்று கொண்டிருந்தான். அப்போது இந்த பழனி மலையில் தான் தூக்கி வந்த இருமலைகளையும் வைத்து களைப்பாறும் போது, இங்கு கோவில் கொண்டிருக்கும் முருகபெருமானுடன் இடும்ப அரக்கன் சண்டையிடும் நிலை ஏற்பட்டது.

முருகனுடனான சண்டையில் தோற்ற இடும்பன் முருகனின் தீவிர பக்தனாக மாறினான். இரண்டு மலைகளை தூக்கி வந்த இடும்பனை கௌரவிக்கும் விதமாக பழனி மலை முருகனுக்கு காவடி தூக்கி செல்லும் வழிபாடு முறை உண்டானது.
மேலும், இங்கிருக்கும் முருகன் விக்கிரகத்தில் ஒரு கிளியின் உருவம் இருக்கிறது. திருப்புகழ் எனும் முருகனை போற்றி பாடல் தொகுப்பை இயற்றிய அருணகிரிநாதர் தான் கிளி வடிவில் முருகனுடன் இருக்கும் பேறு பெற்றிருக்கிறார் என்பது ஐதீகம்.