Tuesday, September 28, 2021
Home செய்திகள் அக்டோபரில் வராமல் போன புயல்.. வானிலையில் நிகழ்ந்த மாற்றம்.. இதான் காரணம்

அக்டோபரில் வராமல் போன புயல்.. வானிலையில் நிகழ்ந்த மாற்றம்.. இதான் காரணம்

நவம்பர் மாதம் தொடங்கி ஒருவாரம் ஆகிவிட்டது, பருவமழையும் தமிழகத்தில் தீவிரமடைய தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் இறுதியில் பருவமழை தொடங்கி இருந்தாலும் அந்த மாதத்தில் ஒரு புயல் கூட உருவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடலில் புயல்கள் தோன்றுவதற்கு சாதகமான மாதங்கள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் சுமார் 80 புயல்கள் வரை உருவாகின்றன. இவற்றில் சராசரியாக 5 புயல்கள் வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலில் உருவாகின்றன.

இந்த பகுதிகள் வடக்கு இந்திய பெருங்கடல் என்று அறியப்படுகிறது. இதில் வங்கக்கடலில் தோன்றும் புயல்களில் 58 சதவிகிதம் கரையை அடைகின்றன. அதேநேரம் அரபிக் கடலில் தோன்றும் புயல்களில் 25 சதவிகிதம் மட்டுமே கரையை அடைகின்றன. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோர பகுதிகளில் உருவாகும் புயல்கள் மோசமான மழை, அதிகப்படியான காற்று, ஆகியவருடன் தொடர்புடையதாகவே இருக்கின்றன. இவற்றில் அதிகம் மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தான் எதிர்கொள்கின்றன.

வடஇந்திய பெருங்கடல்களில் புயல்கள் இயற்கையாகவே இரண்டு பருவங்களில் அதிகம் உருவாகும். ஒன்று ஏப்ரல் முதல் ஜூன் வரை மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை என இரண்டு பருவங்களில் நிகழ்கின்றன. இதில் மே மற்றும் நவம்பர் மாதம் தான் புயல்கள் உருவாவதற்கு உகந்த மாதங்களாக உள்ளன. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அல்லது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலங்களினால் அக்டோபர் மாதங்களிலும் புயல்கள் ஏற்படுவது சாதாரணம்.

இந்திய வானிலை ஆய்வு மையமும் அக்டோபர் மாதங்களில் ஒன்று அல்லது இரண்டு புயல்கள் உருவாவதை சாதாரண நிகழ்வாக உருவாக்கப்படுத்துகிறது. இருப்பினும் இந்தாண்டு அக்டோபரில் ஒரு புயல்கள் கூட தோன்றவில்லை. ஆனால் அதற்கு பதிலாக மூன்று விரைவான வானிலை அமைப்பு ஏற்பட்டது. அதில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக தோன்றியது. இதன்மூலம் ஆந்திரா, தெலுங்கானா, வடக்கு கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் பரவலான மழைபொழிவை பெற்றன.

பசுபிக் பெருங்கடலின் பூமத்திய ரேகையில் ஏற்பட்ட பலவீனமான லா நினா நிலை தான் இந்த நிலைமைக்கு கரணம் என இந்திய வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். கடலின் மேற்பரப்பில் இருக்கும் வழக்கமான வெப்பநிலையை விட குளிர்ந்த சூழல் நிலவுவதை லா நினா என்று குறிப்பிடுவர். இந்தாண்டு ஆகஸ்ட் முதல் இந்த பிராந்தியத்தில் குளிர்ந்த நிலை காணப்படுகிறது. இந்த ஆண்டு லா நினோ பருவமாற்றத்தினால் தென்மேற்கு பருவமழை எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக அளவில் பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் ஆஸ்திரேலியா பீரோ ஆப் மெட்டராலஜி (The Australian Bureau of Meteorology) கணித்துள்ளது.

கடந்த மாதம் வளிமண்டல மட்டங்களுக்கு இடையே விண்ட்ஷியர் எனப்படும் வளிமண்டலத்தில் ஒப்பீட்டளவில் குறுகிய தூரத்திற்கு மேல் காற்றின் வேகம் அல்லது திசையில் வேறுபாடு ஏற்பட்டது. இது குறைந்த காற்றழுத்தம் அல்லது புயல் உருவாவதை தடுத்தது.

நவம்பர் மாதம் புயல்கள் உருவாகக்கூடிய முக்கிய மாதம் என்றாலும் தற்போதைய சூழலில் வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் இரண்டிலும் வானிலையில் உடனடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments