Tuesday, September 28, 2021
Home செய்திகள் இனிய குரலால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பி: மு.க ஸ்டாலின் இரங்கல்!

இனிய குரலால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பி: மு.க ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவை கோடிக்கணக்கான ரசிகர்கள் தம் சொந்தக் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே கருதுகிறோம்.தம்பி சரணுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதல் என இரங்கல் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவையொட்டி பலரும் தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில் தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் பல மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய ‘பாடும் நிலா’ எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கிறது மனம்.

கொரோன கொடுங்கலாம் நம்மிடமிருந்து அற்புத இசைக்கலைஞரைப் பிரித்துவிட்டது.

பரபரப்பான உலகில் மக்களின் மனஅழுத்தத்திற்கு இயற்கையான மருந்து எஸ்.பி.பி.

16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியதுடன் , பல படங்களுக்கு இசையமைத்தும், நடித்தும், பிரபல நடிகர்களுக்கு மாற்றுக்குரல் கொடுத்ததும் பல்துறை வித்தகராக விளங்கியவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.

இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் மற்றும் பல மாநில அரசுகள், திரைத்துறை விருதுகளால் பெருமை பெற்றவர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் அன்பிற்குரியவர்.

தம்பி சரண் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், திரைதுறையினர்க்கும் ரசிகர்களுக்கும் திமுக சார்பில் ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறேன்.

காலம் அவரை பிரித்தாலும், காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன்குரல். என்றும் இளமை மாறாத அந்த இனிய குரல் தந்த பாடல்களால் என்றுன்றும் உயிர்த்திருப்பார் இரவாப் புகழ் கொண்ட பாடகர் எஸ் பி பி அவர்கள்!
என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

 

 

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments