நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விஷயங்களில் வாகனங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் ஒன்றாகும். இன்றைய சூழலில், வீட்டிற்கு ஒரு வாகனம் என்பது அவசியம் ஆகிறது. இதனால், வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் கட்டாயம் மோட்டார் வாகனச் சட்டம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
ஏனெ்னறால், வாகனம் ஓட்டும்போது நாம் செய்யும் சிறிய தவறு கூட பெரிய விபத்தாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால், வாகனம் ஓட்டும்போது கவனமாக ஓட்ட வேண்டும். என்னென்ன விதிமீறல்களுக்கு எவ்வளவு அபராதம் என்பதை கீழே காணலாம்.
- சாலைகளில் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயகரமான சாகசத்தில் ஈடுபட்டால் ரூ.500ஆக இருந்த அபராதம் ரூ.5000 வசூலிக்கப்படும்.
- சாலைகளில் சாகசம் செய்து இரண்டாவது முறை பிடிபட்டால் ரூ.10,000 அபராதம்
- வாகனங்களை 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஓட்டினால், அவர்களுடைய பெற்றோருக்கு தண்டனை விதிக்கப்படும்.
- அவ்வாறு ஓட்டப்படும் வாகனத்திற்கான பதிவு ரத்து செய்யப்படுவதோடு, இந்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.25,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.
- உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம்.
- கைப்பேசியில் பேசி கொண்டே பைக் அல்லது கார் உள்பட வாகனங்களை ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.
- செல்போன் பேசிக்கொண்டே ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்ட பிறகு, மீண்டும் இரண்டாவது முறையாக அதே விதிமீறலை செய்து
பிடிபட்டால் ரூ.10,000 அபராதம். - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி 2வது முறையாக பிடிபட்டால் ரூ.15,000 அபராதம் வசூலிக்கப்படும்.
- சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் ரூ.1000 அபராதம்.
- வாகனங்களுக்கு காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2000 அபராதம்.
- பதிவு இல்லாத வாகனங்களை ஓட்டினால் ரூ.2500 அபராதம்.
- ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாமல் இருந்தால் ரூ.10,000 அபராதம்.
சாலை விதிகளை முறையாக கடைபிடித்து விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதுடன், அபராதம் செலுத்தாமலும் இருக்கலாம்.
ALSO READ | பான் கார்ட் எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்? கவனம் மக்களே