Monday, May 29, 2023
Homeசெய்திகள்தமிழ்நாடுப்ளஸ் 2 தேர்வு.. எழுதாத பல ஆயிரம் மாணவர்கள்.. விதியில் செய்யப்பட்ட முக்கிய மாற்றம்

ப்ளஸ் 2 தேர்வு.. எழுதாத பல ஆயிரம் மாணவர்கள்.. விதியில் செய்யப்பட்ட முக்கிய மாற்றம்

சென்னை: தமிழ்நாடு முழுக்க ப்ளஸ் 2 பொதுத்தேர்வு நடத்து வருகிறது. இந்த பொதுத்தேர்வை பல ஆயிரம் மாணவர்கள் எழுதாமல் வீட்டிற்கு முடங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ப்ளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 4 நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் தொடங்கியது. . தமிழ்நாடு முழுக்க  8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ – மாணவிகள் இந்த தேர்வை எழுதி வருகின்றனர். ஏப்ரல் 3ம் தேதி வரை தேர்வு நடக்க உள்ளது. இதையடுத்து மாணவ, மாணவியர் இந்த தேர்வுகளில் காப்பி அடிக்க கூடாது. வாழ்க்கையை வீணடிக்க கூடாது, எதிர்காலத்தை பாழாக்க கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

அதிர்ச்சி அளிக்கும் வகையில் மாணவர்கள் பலரும் தேர்வுகளை எழுத வரவேயில்லை.. தமிழ் பாடத்தாளை 50 ஆயிரம் பேர் எழுதவில்லை. ஆங்கிலத்தை 49 ஆயிரம் பேர் எழுதவில்லை. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இது உலுக்கி உள்ளது.

தேர்வு எழுதாத மாணவர்களின் வீட்டிற்கு சென்று, அவர்களை நேரில் சந்தித்து, அவர்களை தேர்வு எழுத வைக்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த பொதுத்தேர்வை பல ஆயிரம் மாணவர்கள் எழுதாமல் வீட்டிற்கு முடங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்தான் பொதுத்தேர்வு அனுமதியில் புதிய மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி பின்வரும் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன.

ஆண்டிற்கு மூன்று நாட்கள் வருகை தந்தாலும், மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும்.

பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை பதிவு இருந்தால் தான் தேர்வு எழுத முடியும் என்ற நிலையில் மாற்றம் செய்யப்படுகிறது .

இரண்டு அல்லது மூன்று நாள் பள்ளிகளுக்கு வந்தாலே கூட ஹால் டிக்கெட் வழங்குகிறோம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

மாணவர்களை தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளார்.

ALSO READ | மேட்ரிமோனியல் சைட்டில் வரன் தேடுவரா நீங்கள்? அப்போ இதையெல்லாம் செய்யாதீங்க..!