சென்னை: கோவை, திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி மாவட்டங்களில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு போலீசார் கடந்த மாதத்தில் மட்டும் 3 ரவுடிகளை காலில் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடர் சம்பவங்கள் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரம் தூத்துக்குடியில் ஜெயப்பிரகாஷ் என்பவரை போலீசார் சுட்டு பிடித்தனர். கடந்த பிப்ரவரி 22ம் தேதி தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டார். இவரின் கொலை வழக்கில் போலீசார் பிரகாஷை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் போலீசார் அவரை சுட்டு பிடித்தனர். அவரை பிடிக்க அவரின் இருப்பிடத்திற்கு சென்ற போது போலீசார் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவரை பிடித்தனர்.
அதற்கு முன்னதாக தஞ்சாவூரில் பூவனூர் ராஜ்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரவீன் என்பவரை போலீஸ் சுட்டு பிடித்தனர். இவர் தப்பி ஓட முயன்ற போது போலீசார் இவரை காலில் சுட்டு பிடித்தனர்.
அதற்கு முன்னதாக கோவையில் பிரபல ரவுடி சஞ்சய் ராஜா என்பவரை காலில் சுட்டு பிடித்தனர். விசாரணைக்காக இவரை கரட்டுமேடு பகுதிக்கு அழைத்து சென்ற போது அவர் போலீசாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். இதையடுத்து அவரை காலில் சுட்டு பிடித்தனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கோவை, திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி மாவட்டங்களில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவிடப்பட்டு உள்ளது.
ALSO READ | சொல்ல முடியாது.. அதானி கடன் பற்றி மறுத்த நிர்மலா சீதாராமன்.. சீறிய சு. வெங்கடேசன்