இது பொதுத்தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் அனைவரும் மும்முரமாக படிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பெரும்பாலும் சந்திக்கும் பிரச்சினைகள் படித்ததை எப்படி நினைவில் வைத்துக்கொள்வது என்பதுதான். பலருக்கும் படித்தது அவ்வளவு எளிதில் நினைவில் நிற்காது. இதுவே பெரும் சிக்கல் ஆகும்.
படிப்பதை நினைவில் வைத்துக்கொள்வது என்பது ஒன்றும் அவ்வளவு கடினம் கிடையாது. மிகவும் எளிதான ஒன்றே ஆகும்.
வாசித்தல் :
- நாம் படிக்கும் பகுதியின் அர்த்தம் புரியுமாறு கவனமாக படிக்க வேண்டும்.
- படித்தவற்றை நமக்கு ஏற்கெனவே தெரிந்தவற்றோடு தொடர்புபடுத்தி படிக்க வேண்டும்.
- புத்தகத்தில் மிகவும் முக்கியமான வார்த்தைகளை மட்டுமே அடிக்கோடிடலாம். இவ்வாறு செய்வதால், தேர்வு எழுதும் பொழுது அந்த முக்கியமான வார்த்தைகள் உங்களுக்கு நினைவிற்கு வரும்.
சொல்லிப் பார்த்தல் :
- நாம் படித்தவற்றில் மிக முக்கியமானவற்றை சொல்லி பார்க்க வேண்டும்.
- அப்படி செய்யும்பொழுது உங்களை நீங்களே கேள்வி கேட்டு கொள்ள வேண்டும்.
- படித்து முடித்த பிறகு, பாடத்திலுள்ள தலைப்புகள் அனைத்தையும் கேள்விகளாக மாற்றி கேட்டு கொள்ள வேண்டும்.
- இதன்மூலம் அதை தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.
தவிர்க்க வேண்டியது என்னென்ன?
பொதுத்தேர்வுக்கு தயாராகும்போது, தேர்விற்கு முதல் நாள் இரவு அதிக நேரம் கண் விழித்து படிப்பதை தவிர்த்துவிடுவது நல்லது ஆகும். இவ்வாறு படிப்பதால் உடல் சோர்வு ஏற்படும். இரவு சாப்பிட்ட உணவு செரிமானம் அடையாமல் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதன் காரணமாக மறுநாள் தேர்வு சரியாக எழுத முடியாமல் போகலாம்.
நல்ல ஆரோக்கியமான தூக்கம் எப்போதும் அவசியம். தூக்கத்தை கெடுத்து படித்துவிட்டு, தேர்வு அறையில் தூக்க கலக்கத்தில் தேர்வு எழுதினால் அத்தனை முயற்சிகளும் வீண்போய்விடும். தேர்வு எழுதும்போது எப்போதும் அகந்தையும், அச்சமும் இல்லாமல் தேர்வு எழுதுங்கள். வெற்றி உங்கள் வசப்படும்.
ALSO READ | மாணவர்களே.. பொதுத்தேர்வுக்கு எந்த நேரத்தில் படிப்பது சிறந்து..?