Thursday, June 1, 2023
Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை.. எடப்பாடிக்கு குட் நியூஸ் சொன்ன உயர் நீதிமன்றம்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை.. எடப்பாடிக்கு குட் நியூஸ் சொன்ன உயர் நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கில், தேர்தலை நடத்த தடை இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால் அதே சமயம் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம், தேர்தல் நடைமுறைகள் தொடரலாம், என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக தயாராகி வருகிறார். இவர் சார்பாக நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு ஆதரவாக மேலும் 29 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.  அதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் இன்று நடத்தப்பட்ட விசாரணையில் ஓ பன்னீர்செல்வம் தர்பாபு முக்கியமான வாதங்களை வைத்தது.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி வைத்த வாதங்கள் பின்வருமாறு,

ஜூலை 11 ல் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் சட்டவிரோதமானவையல்ல. சூழ்நிலைகள் மாறியதால் கட்சி வீதியில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான விதிகள் 2017ல் திருத்தப்பட்டது பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் விதி மீண்டும் கொண்டு வரப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை பொதுக்குழு தேர்வு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு வைத்த வாதங்கள் பின்வருமாறு, ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள போது, தேர்தல் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? ஈபிஎஸ் கோரிக்கையை தேர்தல் ஆணையமே மறுத்துள்ளது. ஜெயலலிதாவின் பதவி யாருக்கும் கிடையாது. ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளர் என கூறிவிட்டு இப்போது தேர்தல் ஏன்?

இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கில், தேர்தலை நடத்த தடை இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால் அதே சமயம் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம், தேர்தல் நடைமுறைகள் தொடரலாம், என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ALSO READ | டெல்லிக்கு பறக்கும் அண்ணாமலை.. அதிமுகவிற்கு எதிராக பற்ற வைக்கப்பட்ட தீ.. எரியும் கூட்டணி