சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மனைவியை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். அவரின் பேச்சு சர்ச்சையாகி இருந்தது.
அண்ணாமலை தனது பேச்சில், நான் என்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியதை பலரும் தவறாக பேசுகிறார்கள். தவறாக அர்த்தம் கொண்டு உள்ளனர். நான் என் கட்சியின் தலைவர். அதனால் நான் தலைவர் போலத்தான் செயல்படுவேன். என் மனைவி ஜெயலலிதாவை விட 100 மடங்கு, 1000 மடங்கு பவர் புல் நபர், என் அம்மாவும் அப்படித்தான். அதற்காக இந்த ஒப்பீடுகளை தவறாக எடுத்துக்கொள்ள கூடாது என்று கூறினார்.
இந்த நிலையில் அண்ணாமலையின் மனைவி புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து அதிமுகவினர் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக பாஜகவின் முன்னாள் நிர்வாகி காயத்திரி ரகுராம் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அதில், தனிப்பட்ட தாக்குதல் தவறு.. ஆனால் அண்ணாமலை தனது அம்மாவையும் மனைவியையும் இப்போது தேவையில்லாமல் இங்கு இழுத்து விட்டார். இந்த மாதிரி அடுத்த வீட்டு பெண்களை பேசுறது எவ்ளோ அசிங்கமோ அதே மாதிரி தானே அண்ணாமலை என்னை போன்ற பெண்களை பொது வெளியில் கேவலமாக பேசியது…
3 மாதங்களாக அண்ணாமலையும் அவரது வார்ரூமும் எனது படங்களைப் பயன்படுத்தி என்னைத் தொடர்ந்து தாக்கினர். “உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா” அடையார் வார் ரூம் பெரிய வித்யாசம் எல்லாம் இல்லை.. பொது வாழ்வில் இருக்கும் பெண்களான நாங்கள் இதை அன்றாடம் எதிர்கொள்கிறோம். எல்லோரும் நல்ல பெற்றோருக்குப் பிறந்தவர்கள், அண்ணாமலைக்கு மட்டும் அல்ல. அண்ணாமலையின் மனைவி படத்தை யாரும் பகிர வேண்டாம் யாரும் பற்றி பேச வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அது அரசியல் ரீதியாக சரியல்ல. நன்றி
ALSO READ | செல்லூர் ராஜுவிற்கு இப்படி திமிரா பேச தகுதி இருக்கா? யாருங்க அவரு? விளாசிய அமர் பிரசாத் ரெட்டி