சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் செய்தியாளர்கள் பலருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை சார்பாக காசு கொடுக்கப்பட்டதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. ஸ்டிங் ஆபரேஷன் ஒன்றின் மூலம் இந்த உண்மைகளை மதன் ரவிசந்திரன் வெளியிட்டு உள்ளார்.
இதனால் பாஜகவை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் இது தொடர்பாக புகார் வைத்துள்ளார். அதில், பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் !
இரு பாஜக தொண்டனாக என் குரல்:
ஒரு கேவலமான நிலைமைக்குக் கட்சியைக் கொண்டு போனது காரணம் இப்படிவிளம்பரம் மற்றும் ஊடகங்களை மட்டுமே சார்ந்து கண்ட குப்பையை தன் கேங்க் என்று கூட்டித் தெரியும் அண்ணாமலை. அமர் பிரசாத் ரெட்டி ஊரே கழுவி ஊத்தியும் அமர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாலும் அண்ணாமலை நீக்க மாட்டார், என்றால் அமர் செய்யும் எல்லா குற்றத்திற்கும் பின்புலத்தில் அண்ணாமலை இருக்கிறார் என்று தான் அர்த்தம்.
கட்சியின் ஆதரவாளர்கள் மூத்த நிர்வாகிகள் பேச்சு காது கொடுத்து கேட்காத தான் தோன்றிதனமான செயல்பாடு தான் இன்று பாஜக அசிங்கப்பட காரணம்.
கொஞ்சமாது மக்கள் மன நிலையிலிருந்து பார்த்து அரசியல் பேசுங்கப்பா. தனி உலகத்தில் கற்பனையான உலகத்தில் வாழாதீர்கள்.
அண்ணாமலையால் பாஜக மீதான நம்பகத்தன்மை போய்விட்டது. 6 லட்சம் கோடியை பார்த்ததாக அமர் கூறுகிறார். பிஜேபியும் ஊழல் என்று சொல்கிறாரா?
ஒருவன் கன்னடிகனாகப் பெருமைப்படுகிறான், ஒருவன் ஆந்திராவைப் பெருமைப்படுகிறான். ஆனால் அனைத்து தமிழர்களும் நன்றியற்றவர்கள்- அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்தார்., என்று குறிப்பிட்டு உள்ளார்.
ALSO READ | 24 மணி நேரம்தான்.. எடப்பாடி உருவ பொம்மையை எரித்தவரை மீண்டும் கட்சியில் சேர்த்த பாஜக