தமிழ்நாடு முழுவதும் இப்போது பரபரப்பாக உற்றுநோக்குவது ஈரோடு இடைத்தேர்தலையே. ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ந் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிரதான வேட்பாளர்களாக தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அ,தி.மு.க. சார்பில் தென்னரசு, அ.ம.மு.க. சார்பில் சிவபிரசாத், நாம் தமிழர் சார்பில் மேனகா போட்டியிடுகின்றனர்.
ஜிலேபி சுட்ட அமைச்சர்:
இடைத்தேர்தல் நெருங்க, நெருங்க வாக்கு சேகரிப்பை தீவிரப்படுத்தியுள்ள வேட்பாளர்கள் வித, விதமாக வாக்கு சேகரிக்கின்றனர். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க.வின் அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
.
அப்போது, அவர் வண்டியில் வியாபாரம் செய்யும் பலகார கடையில் உள்ள தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின்போது அந்த கடையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஜிலேபி சுட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார்
வெற்றி உறுதி
பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த செஞ்சி மஸ்தான் “தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெற்றி பெறுவது உறுதி. பெண்கள் மீது உள்ள அக்கறை காரணமாக அதிகமாக பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளுடன் பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் புதுமை கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது
ஒட்டுமொத்த மக்களும் திமுக ஆட்சியிலும் மகிழ்ச்சியாக உள்ளனர். குறைந்தபட்சம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெறுவது உறுதி என்றார்.
ALSO READ | உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஜி20 நாடுகள் – எவ்வாறு?