Friday, May 26, 2023
Homeசெய்திகள்தமிழ்நாடுபேனா நினைவுச் சின்னம் - கனிமொழி கூறியது என்ன தெரியுமா?

பேனா நினைவுச் சின்னம் – கனிமொழி கூறியது என்ன தெரியுமா?

தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக் பேனா தான்.மெரினாவில் ரூ.81 கோடி செலவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது. சமீபத்தில் கூட இதற்கான கருத்து கேட்பு கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது. அரங்கில் மீனவர்கள், அரசியல் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

அப்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாள்ர் சீமான், கடலில் பேனா சிலை வைத்தால் அதை உடைப்பேன் என்று கூறியது சர்ச்சையாக மாறியது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்து மோதல் தொடங்கியது. எழுதாத பேனாவுக்கு எதுக்கு சிலை என தொடங்கி, பேனாவால் தலை நிமிர்ந்த தமிழகம் என டாப்பிக்குகள் நம் கண்ணில் படாமல் இல்லை.

இந்நிலையில், நேற்று பிரபல தனியார் வார இதழின் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு ஆளுமைகள் என ஏரளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாட்டை மாற்றுவதற்கான எத்தனையோ கையெழுத்துகளைப் போட்டது தலைவர் கலைஞர் அவர்களுடைய பேனா என்று கூறினார். பேனா நினைவுச் சின்னம் குறித்து தற்போதைய விவாதங்களுக்கு பதிலளிக்கும் விதமாக கனிமொழி பேசியது குறிப்பிடத்தக்கது.