Monday, May 29, 2023
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் 22ம் தேதி நடக்க போகும் மிக முக்கிய நிகழ்வு.. ஸ்டாலின் அதிரடி.. ரெடியா மக்களே!

தமிழ்நாட்டில் 22ம் தேதி நடக்க போகும் மிக முக்கிய நிகழ்வு.. ஸ்டாலின் அதிரடி.. ரெடியா மக்களே!

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 22ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, மார்ச் 22, நவம்பர் 1-ல் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான் வரும் 22ம் தேதியும் கிராம  சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள  அரசாணைப்படி, உலக தண்ணீர் தினமான 22:03.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். பார்வை 2-ல் காணும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

கிராம சபைக் கூட்டத்திணை ஊராட்சியில் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறைகாய பின்பற்றி உலக தண்ணீர் திண்ணை 22.03.2023 அன்று காலை 10 மணி அளவில் நடத்திட வேண்டும். கிராம சபைக் கூட்டங்ளை மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது. கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் நடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.

கிராம சபை நடத்துவது குறித்து பதிவு செய்திடும் பொருட்டு கைபேசி செயலி (Android applcation) ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி நிகழ்நேர கிராம சபை கூட்ட நிகழ்வுகளை உள்ளீடு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும். 22.03.2023 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அணைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும் மற்றும் கூட்டம் தொடர்பான அறிக்கையினை இவ்வியக்கத்திற்கு 31.03.2023-க்கும் வைக்க கேட்டுக் கொள்கிறேன்.

ALSO READ | அதிகரிக்கும் கோடை வெயில்.. மக்களுக்கு மின்வாரியம் சொன்ன முக்கிய அட்வைஸ்!