சென்னை; வடமாநிலத்தவர் விவகாரத்தில் நிறைய பொய்யான செய்திகள் பரவுகிறது, தமிழ்நாட்டில் பீகார் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சீராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இவர் இன்று திடீரென வடஇந்தியர்களிடம் ஆலோசனை செய்தார். சென்னையில் வேலை செய்யும் பீகார் மக்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக்கு பின் அவர் செய்தியாளர்ப்பிகளை சந்தித்தார்.
லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சீராக் பாஸ்வான் செய்தியாளர் சந்திப்பில் அளித்த பேட்டியில், நான் பீகார் ஊழியர்களிடம் பேசினேன். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பாஜகவினர் சொல்வது போல இங்கே பிரச்சனை இல்லை.
இதை பற்றிய வதந்திகளை நம்பாதீர்கள். இந்த வதந்திகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடியது. வடமாநில மக்கள் இங்கே பாதுகாப்பாக இருக்கிறார்கள். யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, என்று லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சீராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பாக பரப்பப்பட்ட செய்திகளுக்கு பதிலடியாக அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக இரண்டு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவின. தமிழ்நாடு மட்டுமின்றி தேசிய அளவில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இது பொய்யான வீடியோக்கள் ஆகும். வேற்று மாநிலங்களில் பரவிய வீடியோக்களை தமிழ்நாட்டில் நடந்ததாக இவர்கள் பொய்யாக பரப்பினார்கள். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இந்த நிலையில் வன்முறையை உருவாக்கும் விதமாக பொய்யான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டதாக கூறி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ALSO READ | இந்தி தெரியாது போடான்னு.. சொன்னது நீங்க தானே.. திமுகவை சீண்டும் அண்ணாமலை.. பரபர மோதல்