தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6-ந் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதனால், மாணவர்கள் கவனம் பொதுத்தேர்வுக்கு தயார் ஆவதிலே இருக்கும். இதன் காரணமாக பெற்றோர்கள் மாணவர்களின் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இதனால், தேர்வு நேரத்தில் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே காணலாம்.
- தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் காலை உணவை எக்காரணத்தை கொண்டும் தவிர்க்கக்கூடாது.
- எளிதில் செரிக்கக்கூடிய இட்லி, இடியாப்பம், புட்டு காலை உணவுகளாக அளிக்கலாம்.
- பருப்பு, கீரை, காய், கேரட், பீட்ரூட், அவரை, முட்டைக்கோஸ் போன்றவைகளை தினமும் சாப்பாட்டில் சேர்த்து கொடுப்பது நல்லது.
- இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிக்கும்போது கண்ணில் எரிச்சல் ஏற்படாமல் இருக்க, முருங்கை கீரையை உண்ண கொடுக்கலாம்.
- மாணவர்களுக்கு அஜீரணம், அல்சர் போன்றவை இருந்தால் தயிரை கொடுக்கலாம்.
- புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்ற புளிப்புள்ள சாத வகைகளை தேர்வு நேரங்களில் தவிர்ப்பது நல்லது.
- முளைக்கட்டிய பயிர்கள், தேனில் ஊறவைத்த பேரீச்சை, அத்திப்பழம், வேகவைத்த வேர்க்கடலை, பாதாம் பருப்பு போன்றவைகளை சாப்பிட கொடுக்கலாம்.
- பாதாம் பருப்பு நினைவாற்றலுக்கு மிகவும் உகந்ததாகும்.
- தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பெற்றோர்கள் மாணவர்களுக்கு இரவு நேரங்களில் டீ, காபி அளிக்கின்றனர். இவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சூடான பால், லெமன் டீ போன்றவைகளை குடிக்க கொடுக்கலாம்.
- அனைத்தையும் விட கவனமான விஷயம் மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறார்களா? என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.
- இல்லாவிட்டால் மாணவர்களின் உடலில் நீரின் அளவு குறைந்து உடல் உபாதைகளை ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் உடல்நலத்தில் முழு கவனத்துடன் இருக்க வேண்டும்.
ALSO READ | பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களா..? இப்படி படியுங்க ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்..!