Wednesday, May 24, 2023
Homeசெய்திகள்தமிழ்நாடுசாமானியனா சொல்கிறேன்.. 24 மணி நேர டைம்.. முடிந்தால் என் மீது கை வையுங்கள்! போலீசுக்கு...

சாமானியனா சொல்கிறேன்.. 24 மணி நேர டைம்.. முடிந்தால் என் மீது கை வையுங்கள்! போலீசுக்கு அண்ணாமலை சவால்

சென்னை; வடமாநிலத்தவர் விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. இந்த நிலையில் முடிந்தால் என் மீது கை வைத்து பாருங்கள் என்று அண்ணாமலை போலீசுக்கு சவால் விட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக இரண்டு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவின. தமிழ்நாடு மட்டுமின்றி தேசிய அளவில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், வட மாநில சகோதரர்களை, அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலும், தங்கள் ஊருக்குச் செல்ல ரயில் நிலையங்களில் காத்திருக்கும் சகோதரர்களையும் நேரில் சென்று சந்தித்து, தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், சமூக வலைத்தளங்களில் பரவும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.  மேலும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வட மாநில சகோதரர்களுக்கும் பாதுகாப்பாக தமிழ்நாடு பாஜக இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு முன்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்., வட இந்தியர்களைப் பற்றி திமுகவின் எம்பிக்களின் கீழ்த்தரமான கருத்துக்கள், திமுக அமைச்சர் அவர்களை பானிபூரி வாலா என்று அழைத்தது மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சியினர் அவர்களை வெளியேற்றக் கோருவது போன்ற சம்பவங்கள்தான் இன்று நாம் பார்க்கும் அனைத்திற்கும் காரணம்.  திமுக மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை மக்களின் கருத்தாக , அரசின் கருத்தாக பார்க்க கூடாது. திமுக எப்பொழுதும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்ளும். அந்த சூழ்ச்சி திமுகவையே கடிக்க வந்திருக்கிறது.,இனி இந்த நிலையை சரி செய்ய வேண்டியது அவர்களின் பொறுப்பாகும், மேலும் அவர்களின் செயலிழந்த பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக உள்ளது, என்று கூறி இருந்தார்,.

Arrest me if you can, BJP chief Annamalai challenges Tamil Nadu police

இந்த நிலையில் வன்முறையை உருவாக்கும் விதமாக பொய்யான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டதாக கூறி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.   இந்த நிலையில் இது தொடர்பாக அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அதில், வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன்.

அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்.  அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்!, என்று கூறியுள்ளார்.