Friday, May 26, 2023
Homeசெய்திகள்தமிழ்நாடுகோட்டையிலேயே அதிமுக வீழ்ந்துவிட்டது.. எடப்பாடியை சீண்டும் பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி

கோட்டையிலேயே அதிமுக வீழ்ந்துவிட்டது.. எடப்பாடியை சீண்டும் பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி

சென்னை: அதிமுகவை பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மிக கடுமையான வார்த்தைகளால் அதிமுகவை அவர் தாக்கி உள்ளார்.

அதிமுக பாஜக இடையிலான மோதல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து உள்ளார். அதேபோல் பாஜக நிர்வாகி திலீப் கண்ணன் அதிமுகவில் இணைந்து உள்ளார்.

இவர்கள் எல்லாம் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து உள்ளனர். அதிமுகவின் இந்த செயலால் பாஜகவில் இருக்கும் நிர்வாகிகள் பலர் அப்செட்டில் உள்ளனர்.

Amar Prasad reddy condems AIADMK, After BJP Nirmal Kumar leaves the party,அதிமுக கூட்டணி கட்சியாக இருந்தியு கொண்டு இப்படி செய்து இருக்க கூடாது. தமிழ்நாட்டில் பாஜகதான் ஆட்சி அமைக்க போகிறது. அண்ணாமலை தலைமையிலான பாஜகதான் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கும், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய  இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா?  இனி, அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை!

நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?

பாஜக மட்டுமே தமிழ்நாட்டின் எதிர்காலம். அதிமுக தனது கோட்டையான கொங்கு மண்டலத்திலேயே மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம், என்று குறிப்பிட்டு உள்ளார்.

ALSO READ | இந்தி தெரியாது போடான்னு.. சொன்னது நீங்க தானே.. திமுகவை சீண்டும் அண்ணாமலை.. பரபர மோதல்