Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்இந்தியாகழிப்பறை டைல்ஸ்க்கு எதிராக போராடும் அரசியல் கட்சி.. என்ன காரணம் தெரியுமா?

கழிப்பறை டைல்ஸ்க்கு எதிராக போராடும் அரசியல் கட்சி.. என்ன காரணம் தெரியுமா?

கோரக்பூர் : உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருக்கும் கழிப்பறை சுவர்களுக்கு போடப்பட்ட டைல்ஸ் உத்திரபிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமாஜ்வாடி கட்சி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ளது லலித் நாராயண் மிஸ்ரா ரயில்வே மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் இருக்கும் கழிப்பறைக்கு சமீபத்தில் புதுப்பிப்பு வேலைகள் நடைபெற்றுள்ளது. அப்போது புதிய டைல்ஸ் போடப்பட்டுள்ளது. இது தான் சர்ச்சைக்கு காரணமே. இந்த டைல்ஸ் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது மேல்பக்கம் சுவற்றில் சிவப்பு நிறத்திலும், கீழே தரையில் பச்சை நிறத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. இது பார்ப்பதற்கு அப்படியே சமாஜ்வாடி கட்சியின் கொடியின் நிறம் போன்று உள்ளது.

Samajwadi Party Flag

இதனால் இந்த நிறத்திற்கு சமாஜ்வாடி கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் ஊழல் சிந்தனை நிரம்பிய அரசியல்வாதிகளின் அரசியல் பகை காரணமாக கோரக்பூர் ரயில்வே மருத்துவமனையில் கழிவறைச் சுவர்களை சமாஜ்வாடி கட்சியின் நிறத்தில் வடிவமைத்துள்ளது வெட்கக்கேடான செயல். இது ஜனநாயகத்தை களங்கப்படுத்துகிறது! ஒரு பெரிய அரசியல் கட்சியின் கொடியின் நிறங்களை அவமானப்படுத்தும் செயல் முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுத்து அந்த நிறங்களை மாற்ற வேண்டும் என்றும் அதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

உத்திரபிரதேசத்தில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கிறார். இவருக்கு எதிராக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து போட்டியிடும் தோல்வியடைந்ததும் குறிப்பிடத்தக்கது.