Saturday, March 25, 2023
Homeசெய்திகள்அரசு மரியாதையுடன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கம்!

அரசு மரியாதையுடன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கம்!

சென்னை: 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்தநிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன் படி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் காம்தார் நகர் இல்லத்தில் இருந்து தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. பின்னர் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

இந்நிலையில், அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.