Thursday, June 1, 2023
Homeசெய்திகள்உலகம்உணவுக்காக கையேந்தும் மக்கள்... பட்டினியின் பிடியில் சிக்கிறதா பாகிஸ்தான்...?

உணவுக்காக கையேந்தும் மக்கள்… பட்டினியின் பிடியில் சிக்கிறதா பாகிஸ்தான்…?

உலகின் பல நாடுகளும் தற்போது பசி, பட்டினி இன்னல்களை இந்த நவீன யுகத்தில் சந்தித்து வருகின்றனர். அந்த நாடுகளின் வரிசையில் தற்போது பாகிஸ்தானும் இணையும் அபாயம் இருந்து வருகிறது. பாகிஸ்தான் மக்கள் தற்போது உணவுக்காக சண்டையிட்டு கொள்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் தனது பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கடன் மற்றும் சில உதவிகளைப் பெற்றுள்ளது. வெள்ளப் பெருக்கு சிக்கலில் இருந்து மீள்வதற்கு 9 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான உதவியை பாகிஸ்தானுக்கு வழங்க ஜெனீவாவில் நடந்த நன்கொடையாளர்கள் மாநாட்டில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் கருவூலம் வேகமாக காலியாகி வரும் நிலையில், இந்த செய்தி பாகிஸ்தானுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. பாகிஸ்தானிடம் சுமார் நாலரை பில்லியன் டாலர்கள் அந்நிய செலாவணி கையிருப்பே மீதமுள்ளது. அது சில வாரங்களின் இறக்குமதி செலவுக்கு மட்டுமே போதுமானது. இது தவிர பாகிஸ்தானுக்கு பல கடன்களை திருப்பிச்செலுத்தும் பொறுப்புகளும் உள்ளன. ஜெனீவா மாநாட்டில் 9 பில்லியன் டாலர் திரட்டியதை ஹாபாஸ் ஷெரீப் அரசு தனது சாதனையாக காட்டி வருகிறது.

சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு வழங்கிய பழைய மூன்று பில்லியன் டாலர் கடனை ஐந்து பில்லியன் டாலராக உயர்த்துவதோடு கூடவே முதலீட்டை அதிகரிப்பது பற்றியும் பேசியுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் உலகின் பிற அமைப்புகளிடமிருந்து 8.7 பில்லியன் டாலர்கள் பெற பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இந்தத் தொகை கடனாகப் பெறப்படுமா? அல்லது மானியமாக பெறப்படுமா..? என்பது இன்னும் முடிவாகவில்லை.

பாகிஸ்தானின் முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று “இங்குள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைத்துவிட்டது போல அரசு அதிகாரிகள் பெருமிதம் கொள்கிறார்கள். இதனால் பாகிஸ்தானின் டாலர் தட்டுப்பாடு முடிவுக்கு வரப்போவதில்லை என்பதே உண்மை என்று எழுதியுள்ளது. ஏற்கனவே கடந்தாண்டு இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். தற்போது வரை இலங்கையின் நிலை சரியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் உள்பட பல நாடுகளிலும் தற்போது வரை அந்த நிலை நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.