Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்உலகம்Happy Birthday Corona! ஓராண்டு நிறைவடைந்து விட்டது.. கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

Happy Birthday Corona! ஓராண்டு நிறைவடைந்து விட்டது.. கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

ஹூபேய் : இன்று தான் அதிகாரபூர்வமாக முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்ட நாள். இன்றோடு சேர்த்து மொத்தம் ஓராண்டு நிறைவடைந்து விட்டது இன்று வரை கொரோன வைரஸ் ஏற்படுத்தும் கோவிட்-19 நோய் பாதிப்புக்கு எதிரான தடுப்பு மருந்து இன்னமும் கண்டறியப்படவில்லை.

நவம்பர் 17ம் தேதி தான் முதல் கொரோனா வைரஸ் கேஸ் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் 55 வயது நபர் ஒருவருக்கு தான் அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டதாக சீனாவின் அரசு அறிக்கை ஒன்றில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் இவருக்கு யாரிடமிருந்து பரவியது என்பதற்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை. அவர் தவிர நவம்பரில் மேலும் 4 ஆண்களுக்கும், 5 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் யாருமே பேஷண்ட் ஸிரோ கிடையாது. உண்மையில் பேஷண்ட் ஸிரோ யார் என்பதை கண்டுபிடித்தால் மட்டுமே கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பதையும் கண்டுபிடிக்க முடியும். பேஷண்ட் ஸிரோ என்பது முதன் முதலில் இந்த தொற்று பாதித்த நபர். ஆனால் அப்படி யாரும் இதுவரை கண்டறியப்படவில்லை.

கோவிட்-19 பாதிப்பு

இதன் பிறகு டிசம்பரில் தான் கொரோனா குறித்து உலகம் அறிய தொடங்கியது. கொரோனா வைரஸ் குடும்பத்தில் இது ஐந்தாம் தலைமுறையை சேர்ந்தது என்று கூறப்பட்டது. இதற்கு முன்பு கொரோனா வைரஸில் இருந்து தோன்றிய சார்ஸ், மெர்ஸ் போன்ற வைரஸ் பாதிப்புகள் உலகை அச்சுறுத்திய வரலாறுகள் இருந்த நிலையில் இதுவும் அப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கணிக்கப்பட்டது. ஆனால் இப்போது தோன்றிய கோவிட்-19 பாதிப்பு சார்ஸ், மெர்ஸ் வைரஸ்களை விட மோசமானது என்பது பின்னர் தான் தெரிந்தது.

Its been one Year since first covid-19 case reported in china

பல வழிகளில் பிறரிடம் பரவும் தன்மை கொண்டதாக இருந்ததாலும், ஆரம்ப காலத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்ட 15 நாட்களுக்கு எந்த அறிகுறியும் காட்டாமலே பிறருக்கு பரவும் தன்மை இருந்ததாலும் மிக வேகமாக உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. டிசம்பரில் சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ், ஜனவரிக்கு பிறகு இத்தாலியை ஆட்டி படைத்தது, பின்னர் அமெரிக்காவிலும் ஏப்ரல் முதல் இந்தியாவிலும் அதன் கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. இது ஆர்.என்.ஏ வகை வைரஸ் என்பதால் இடத்திற்கு தகுந்தாற் போல் உருமாற்றம் அடைகிறது. இதனால் வைரஸின் தன்மையும் மாறுபடுவதால் தடுப்பூசி தயாரிப்பதிலும் மருந்து நிறுவனங்களுக்கு பெரும் சவாலானதாக இருந்தது.

கிட்டத்தட்ட ஒருவருடம் நிறைவடைந்து விட்டது. உலகம் முழுவதிலும் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்கா தான், இரண்டாவதாக இந்தியா உள்ளது. 2020 ஆம் ஆண்டு மார்ச்க்கு பிறகு ஒட்டுமொத்த உலகமும் கொரோனவால் முடங்கி கிடந்தது. சுமார் 100 மருந்து நிறுவனங்கள் வரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிரமாக முயன்று வருகிறது. இன்று வரை கொரோனவை ஒழிக்க உலகிற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.

இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் Happy birthday corona என்று பதிவிட்டு கிண்டல் செய்து வருகின்றனர். கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் பெரும்பாலான மக்களுக்கு எப்படியும் ஏற்படுத்தியிருக்கும். சிலருக்கு வைரஸ் பாதிப்பு மூலம் நேரடியாக ஏற்பட்டு இருந்தால் சிலருக்கு அதற்காக போடப்பட்ட லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, வேலையிழப்பு, இப்படியான மறைமுக காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகம். உலகம் முழுவதிலும் இதுவரை பல கொடிய வைரஸ்கள் மனித குலத்தை தாக்கியிருந்தாலும் வைரஸ்க்கும் மனிதனுக்குமான இந்த போரில் எப்போதும் மனிதன் வெற்றி பெற்று இருக்கிறான், இப்போதும் நிச்சயம் வெற்றி பெரும் என்றே உலகம் இயங்கி கொண்டிருக்கிறது.