Saturday, March 25, 2023
Homeசெய்திகள்இந்தியாஇறுதிகட்ட சோதனை வெற்றி - விரைவில் ராணுவத்திற்கு இணையும் நாக் ஏவுகணை

இறுதிகட்ட சோதனை வெற்றி – விரைவில் ராணுவத்திற்கு இணையும் நாக் ஏவுகணை

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டிலேயே உருவாக்கிய நாக் ஏவுகணை இன்று இறுதிகட்ட சோதனை செய்யப்பட்டது. இந்த நாக் ஏவுகணை எதிரி பீரங்கிகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது ஆகும்.

ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் பாலைவன பகுதியில் நாக் ஏவுகணை சோதனை நடைபெற்றது. சோதனையின் போது விண்ணில் சீறிபாய்ந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இன்று நடைபெற்றது இறுதிகட்ட சோதனை என்பதால் இந்த ஏவுகணை விரைவில் ராணுவத்தில் இணைக்கப்படுகிறது.

நாக் ஏவுகணை குறைந்தது 4 கிலோமீட்டர் முதல் அதிகபட்சம் 7 கிலோமீட்டர்கள் வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டுள்ளது. மேலும் இலக்குகளின் குறி தவறாமல் இருக்க இதன்மேல் அதிநவீன தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு இரு்கிறது.

மூன்றாம் தலைமுறை ஏவுகணை என்பதால், இது எதிரிகளின் பீரங்கிகளை பகல் மற்றும் இரவு நேரங்களில் தாக்கி அழிக்க முடியும். இந்திய ராணுவத்தில் தற்சமயம் இரண்டாம் தலைமுறை மிலன் 2டி மற்றும் கொன்குர் ஏடிஜிஎம்கள் பயன்படுத்தப்படுகின்றன.